பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி மருத்துவமனையில் அட்மிட்
கோவை: பா.ஜ., - - எம்.எல்.ஏ., வானதி, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று காலை மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் பங்கேற்ற, வர்த்தகர்கள், தொழிலதிபர்களுடனான கலந்துரையாடலில், வானதியும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்த பின், மீண்டும் பிரசாரத்துக்கு செல்ல தயாரானார். ஆனால், வானதியால் எழுந்து நடக்க முடிய வில்லை. இதையடுத்து, அவர் கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடும் வெயிலில் பிரசாரம் செய்ததால் நீரிழப்பும், துாக்கமின்மையால் உடற்சோர்வும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். வானதி தீவிர சிகிச்சை பிரிவில் 48 மணி நேரம் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am