கூட்டம் வரலாம் ஓட்டாக மாறாது
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு, கடந்த ஐந்தாண்டு தி.மு.க., ஆட்சியில் எவ்வித வளர்ச்சியும் இல்லை; சமூக நீதியும் கிடைக்கவில்லை. பா.ஜ., கூட்டணியை சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்பது போன்ற தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசில், தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நல திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
முஸ்லிம்களும் பல்வேறு நல திட்டங்களை பெற்று வருகின்றனர். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, மத்திய பா.ஜ., அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
த.வெ.க., தலைவர் விஜயை பார்க்க கூட்டம் வரலாம்; அது, ஓட்டாக மாறாது. இத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., இடையே தான் போட்டி.
- ராம்தாஸ் அத்வாலே
மத்திய அமைச்சர்,
இந்திய குடியரசு கட்சி
Advertisement

வாசகர்கள் கருத்துகள்