முண்டியடிக்கும் முனுசாமியை முடித்து கட்ட மும்முரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி. களநிலவரம் எப்படி இருக்கிறது? ஆரம்பத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் என, தன்னை காட்டிக்கொண்டு, சசிகலாவிற்கு எதிராக குரல் கொடுத்து, அ.தி.மு.க.,வை இரண்டாக உடைத்தது, பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைந்தபின், பழனிசாமி ஆதரவாளராக மாறி, பன்னீர்செல்வத்தை எதிர்த்தது, கட்சியில் இருந்து செங்கோட்டையன் வெளியேறிய பிறகும் அவருக்கு எதிராக பேசுவது, கட்சியினரை விட, தன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பா.ம.க.,வினராக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது என, சொந்த கட்சியினரே, முனுசாமி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.