Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 முண்டியடிக்கும் முனுசாமியை முடித்து கட்ட மும்முரம்

 முண்டியடிக்கும் முனுசாமியை முடித்து கட்ட மும்முரம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி. களநிலவரம் எப்படி இருக்கிறது?

ஆரம்பத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் என, தன்னை காட்டிக்கொண்டு, சசிகலாவிற்கு எதிராக குரல் கொடுத்து, அ.தி.மு.க.,வை இரண்டாக உடைத்தது, பழனிசாமி - பன்னீர்செல்வம் இணைந்தபின், பழனிசாமி ஆதரவாளராக மாறி, பன்னீர்செல்வத்தை எதிர்த்தது, கட்சியில் இருந்து செங்கோட்டையன் வெளியேறிய பிறகும் அவருக்கு எதிராக பேசுவது, கட்சியினரை விட, தன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பா.ம.க.,வினராக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது என, சொந்த கட்சியினரே, முனுசாமி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

உதாரணமாக, 2021 சட்டசபை தேர்தலில், தங்களுக்கு தான் 'சீட்' வாங்கி கொடுப்பார் என நினைத்து, அவரது ஆதரவாளர்கள் பலர் விருப்பமனு வழங்கினர். ஆனால் கடைசி நேரத்தில் வேப்பனஹள்ளி தொகுதியில் அவரே களமிறங்கி விட்டார் எனப் புலம்புகின்றனர்.

அதேபோல், அவரால் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு, ஒன்றிய செயலர் பதவியை இழந்து, தற்போது த.வெ.க.,வில் அடைக்கலம் புகுந்துள்ளனர், மது ேஹம்நாத் மற்றும் தொழிலதிபர் சம்பங்கி ஆகியோர்.

அ.தி.மு.க.,வில் தம்பிதுரைக்கும் முனுசாமிக்கும் ஏற்கனவே ஒத்துப்போகவில்லை. அதேபோல், கட்சியின் மேற்கு மாவட்ட செயலர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கும் முனுசாமிக்கும் இடையே நல்லுறவு இல்லை.

இவ்வளவு சிக்கலான சூழலில், தொகுதியில் உள்ள வன்னியர், குரும்பர் ஓட்டுகளையும், கூட்டணியில் உள்ள பா.ம.க.,வையும் நம்பி போட்டியிடுகிறார் முனுசாமி.

முனுசாமியைத் தோற்கடிக்க, த.வெ.க.,வில் உள்ள மது ேஹம்நாத், தொழிலதிபர் சம்பங்கி ஆகியோரும், முனுசாமியிடம் கடந்த முறை தோற்ற தி.மு.க., மேற்கு மாவட்ட துணைச் செயலர் முருகனும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். பணத்தை வாரி இறைக்க, தி.மு.க., தயாராக உள்ளது.

மேலும், முனுசாமி வெற்றி பெறக்கூடாது என, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளதால், அக்கட்சியினர் தீயாக வேலை செய்து வருகின்றனர்.

அதோடு, பாலகிருஷ்ணா ரெட்டியின் ஆதரவாளர்களும் தொகுதியில், முனுசாமிக்கு வேலை செய்வது சிரமம் தான். த.வெ.க.,விற்கு செலவு செய்து, அதன் மூலம் முனுசாமியை தோற்கடிக்கவும், செங்கோட்டையன் மறைமுகமாக காய் நகர்த்துவதாக தகவல் பரவுகிறது.

Advertisement