/ செய்திகள் /  மயிலம் தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் வேட்பாளர் சண்முகம் உறுதி

 மயிலம் தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் வேட்பாளர் சண்முகம் உறுதி

திண்டிவனம்: 'பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் மயிலம் தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன்' என வேட்பாளர் சண்முகம் பேசினார். மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் அவர் நேற்று காலை வல்லம் வடக்கு ஒன்றியம் மேல்சித்தாமூர், ஆனாங்கூர், நங்கியாநந்தல், போந்தை உள்ளிட்ட கிராமங்களில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு பேசுகையில், 'பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன். தி.மு.க.,வினர் மாதிரி கூப்பன் தராமல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும். ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். தீபாவளிக்கு பட்டுப் புடவை, வேட்டியும், பொங்கலுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்களுடன் சேர்த்து 1,000 ரூபாய் வழங்கப்படும். தாலிக்கு தங்கம் மீண்டும் தொடரும். தனிப்பட முறையில் என்னிடம் தயங்காமல் உதவி கேளுங்கள். கண்டிப்பாக செய்து கொடுப்பேன்' என்றார். வல்லம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க,, செயலாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !