தேர்தல் நிதி கேட்கும் நா.த.க., வேட்பாளர்கள்
- நமது சிறப்பு நிருபர் -
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், தங்களுக்கு நிதியுதவி அளிக்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை துவக்கி விட்டனர். வேட்பாளர்கள் தங்கள் நிதி நிலைக்கேற்ப, ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், ஓட்டு கேட்டு, மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருகின்றனர். அதில் நிதியுதவி அளிக்க விரும்புவோர், துண்டுப் பிரசுரத்தில் அச்சிடப்பட்டுள்ள, கியூ.ஆர்., குறியீடு வழியே நிதி அளிக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.
அதை கேட்கும் வாக்காளர்கள், நீங்கள் ஓட்டுக்கு பணம் தருவீர்கள் என பார்த்தால், எங்களிடம் பணம் கேட்கிறீர்களே எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்