/ செய்திகள் /  பிரசாரத்தில் தட்டுக்குத் துட்டு: அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

 பிரசாரத்தில் தட்டுக்குத் துட்டு: அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அலங்காநல்லுார்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அ.தி.மு.க., வேட்பாளர் மாணிக்கத்தின் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.100 வழங்கிய நிர்வாகி அறிவழகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அலங்காநல்லுார் அருகே குமாரத்தில் வேட்பாளர் மாணிக்கம், நேற்று பிரசாரத்தை துவக்கினார். இப்பகுதியின் குறுகலான ரோட்டில் கட்சி நிர்வாகிகளின் கார்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் நெரிசலில் பிற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. போக்குவரத்து பாதித்தது. வேட்பாளரை வரவேற்று வெடித்த பட்டாசு, ரோட்டில் டூவீலரில் கணவருடன் அமர்ந்திருந்த பெண் உள்ளிட்டோர் மீது வெடித்து சிதறியது. மணியஞ்சி, தண்டலை பகுதிகளிலும் பறக்கும் படையினர் வேட்பாளரை பின்தொடர்ந்தனர். கல்லணையில் ஊராட்சி அலுவலகம் அருகே வேட்பாளர் பிரசாரத்தை முடித்துச் சென்ற பின் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு கிளைச் செயலாளர் அறிவழகன் பணம் வழங்கினார். அலங்காநல்லுார் போலீசார் அறிவழகன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !