விஜய் மீது சி.பி.ஐ., வழக்கு: பழனிசாமி தரப்பு திட்டம்?
- நமது நிருபர் -'குதிரை பேரம் வாயிலாக, குறுக்கு வழியில் ஆதரவு பெற்ற முதல்வர் விஜய் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிய வாய்ப்புள்ளது' என, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., இன்பதுரை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'கடந்த 1993ல் லோக்சபாவில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற, குதிரை பேரம் வாயிலாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி.,க்கள் ஆதரவை, குறுக்கு வழியில் அன்றைய காங்கிரஸ் அரசு பெற்றது. இதற்காக, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ், மத்திய அமைச்சர் பூட்டா சிங் ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.'அதுபோல இப்போதும் முதல்வர் விஜய் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது' என, தெரிவித்துள்ளார். குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக, முதல்வர் மீது, கவர்னரின் செயலரிடம் பழனிசாமி தரப்பு ஏற்கனவே புகார் அளித்துள்ளது.இந்நிலையில், குதிரை பேரத்தில் ஈடுபட்ட முதல்வர் விஜய் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிய வாய்ப்புள்ளதாக பழனிசாமி ஆதரவு எம்.பி., இன்பதுரை கூறியுள்ளதால், அதற்கான முயற்சியில் பழனிசாமி தரப்பினர் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 11 )
கட்சியில் திடிரென்று சசிகளாவால் தேர்ந்தெடுக்கட்ட ஒருவர் அவருக்கு நன்றி செலுத்தவில்லை அதற்கு முன்பு கட்சியில் எடப்பாடி என்றால் ஒரு கொசுவிற்குக்கூட யார் என்றே தெரியாது கட்சியில் முதல்வரானவுடன் சற்றே பிரபலமானவுடன் தனக்கு தலை - கால் புரியவில்லை தனது கைவரிசையை காட்ட ஆர்மபித்துவிட்டார் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து மூத்த தலைவர்களை விலக்க ஆரம்பித்துவிட்டார் சசிகலா, தினகரன், பன்னிருசெல்வம், செங்கோட்டையன். இப்போது அடுத்தபடியாக வேலுமணி, ஷண்முகம், விஜய் பாஸ்கர், இப்படியே சென்றால் கட்சியில் கடைசியில் அவர் மட்டுந்தான் இருப்பபார். இப்படி இவர் தனது கட்சியிலிருந்து விளங்கியவர்கள் அனைவரும் அடுத்த கட்சியில் பிரபலமாகி உள்ளார்கள் அங்கே சென்று அமைச்சர்கள் ஆகியுள்ளார் தலைவிதி என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை பன்னிருசெல்வம், செங்கோட்டையன்,
Ask EPS to take retirement… old people must take rest to enjoy peacefull life at the end.
சிபிஐ விசாரணை
தோல்வியை தாங்கிக் கொள்ள முடியவில்லை குறுக்கு வழியில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து முதல்வராகலாம் என்ற கனவும் தவிடு பொடி எனவே பைத்தியம் பிடித்து என்ன செய்வது என்று தெரியாமல் அலைகிறார்
யார் பைத்தியம்? மற்ற கட்சி எம்.எல்.ஏக்களை உருவி ஆட்சி அமைப்பவர்கள்தான் பதவி வெறி கொண்டு, பதவி பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.
கண்டிப்பாக வழக்கு தொடர வேண்டும். இதுவரை தமிழ்நாட்டில் எந்த ஒரு முதல்வரும் ஒரு கட்சி இரண்டு பிரிவாக பிரிந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல் நாள் ஒரு பிரிவினரை மட்டும் வீடு தேடி சென்று சந்தித்ததே இல்லை. சந்தித்த மறு நாள் முதல்வருக்கு ஆதரவாக அந்த எம்.எல்.ஏக்கள் சட்ட மன்றத்தில் வாக்களிக்கிறார்கள். இதற்கு பெயர் என்ன? ஒருவர் உழைப்பை மற்றவர் சுரண்டுவதா? இல்லை வேறு பேரமா?
Best comment .Further lottery mafia should be probed by multi tasking enforcement authorities.
அப்படி வழக்குத் தொடர்ந்தால், அதிமுக மற்றும் பிஜேபிக்கு கெட்ட பெயர் தான் வரும்.
கொடநாடு வழக்கை தூசு தட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.... அந்த வழக்கை முதலில் விசாரித்து முடிப்பேன் என்று விடியல் தலைவர் தனது முந்தைய தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார்.... ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு...5 ஆண்டுகள் திமுக ஆட்சி செய்த போது அந்த வழக்கை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டார்.... அதற்க்கு கைமாறாக.... பழனிச்சாமி திமுக ஆட்சியின் அவலங்களை கண்டும் காணாமல் இருந்தார்.... திமுக ஆட்சிக்கு எதிராக ஒரு போராட்டம் கூட செய்ததில்லை.... பிஜேபி கட்சியை சேர்ந்த அண்ணாமலை அவர்கள் தான் உண்மையான எதிர்கட்சி போல செயல்பட்டார்.
வாய்ப்பே இல்லை.பாஜவுக்குத் தான் கெட்ட பெயர் வரும்.
சரியே ....
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am