Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜய் மீது சி.பி.ஐ., வழக்கு: பழனிசாமி தரப்பு திட்டம்?

விஜய் மீது சி.பி.ஐ., வழக்கு: பழனிசாமி தரப்பு திட்டம்?

- நமது நிருபர் -
'குதிரை பேரம் வாயிலாக, குறுக்கு வழியில் ஆதரவு பெற்ற முதல்வர் விஜய் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிய வாய்ப்புள்ளது' என, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., இன்பதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'கடந்த 1993ல் லோக்சபாவில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற, குதிரை பேரம் வாயிலாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி.,க்கள் ஆதரவை, குறுக்கு வழியில் அன்றைய காங்கிரஸ் அரசு பெற்றது. இதற்காக, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ், மத்திய அமைச்சர் பூட்டா சிங் ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
'அதுபோல இப்போதும் முதல்வர் விஜய் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளது' என, தெரிவித்துள்ளார். குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக, முதல்வர் மீது, கவர்னரின் செயலரிடம் பழனிசாமி தரப்பு ஏற்கனவே புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், குதிரை பேரத்தில் ஈடுபட்ட முதல்வர் விஜய் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிய வாய்ப்புள்ளதாக பழனிசாமி ஆதரவு எம்.பி., இன்பதுரை கூறியுள்ளதால், அதற்கான முயற்சியில் பழனிசாமி தரப்பினர் இறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement