நேர்மையான தேர்தலுக்காகவே தலைமை செயலர் மாற்றம்: பா.ஜ.,
சேலம்: ''நேர்மையான தேர்தலை உறுதி செய்யவே, தலைமை செயலர் மாற்றப்பட்டுள்ளார்,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார். சேலம் அம்மாபேட்டை பகுதியில், வடக்கு தொகுதி பா.ம.க., வேட்பாளர் சதாசிவம், தெற்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வினோத் ஆகியோரை ஆதரித்து, அண்ணாமலை பேசியதாவது: கடந்த எட்டு மாதங்களாக, பொறுப்பு டி.ஜி.பி., மட்டுமே நியமிக்கப்பட்டிருந்த அவல நிலை காணப்பட்டது. அதை களையவே தேர்தல் கமிஷன், டி.ஜி.பி.,யை நியமித்துள்ளது. இடைப்பாடியில் தி.மு.க., வேட்பாளர் வேட்பு மனுவில் கையெழுத்து வேறு இடத்தில் போடப்பட்டிருந்தும் திருத்தி, வேட்பு மனுவை ஏற்றது; துணை முதல்வர் உதயநிதி வேட்பு மனுவில் முதலீடை குறிப்பிடவில்லை என்பதால், பரிசீலனையின் போது அழைத்து அந்த தகவலை சேர்த்தது என தேர்தல் அதிகாரிகள் முறைகேடாக நடந்து கொண்டதால், நேர்மையான தேர்தலை உறுதி செய்யவே, தலைமை செயலர் மாற்றப்பட்டுள்ளார். தி.மு.க., அரசு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ சிறுபான்மையினரை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. வெறுப்புணர்வை விதைத்து ஓட்டுகளை பெறும் அவர்கள், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில், அடிப்படை வசதிகளை கூட செய்து தருவதில்லை. உதயநிதி குழந்தையாக டயபர் போட்டு கொண்டிருந்தபோதே, பழனிசாமி எம்.எல்.ஏ., வாக இருந்தார். எனவே நாகரிகமான கருத்துக்களை உதயநிதி முன்வைப்பது நல்லது. தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரை, கஞ்சாவை ஒழிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am