Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 சங்கி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும்: உதயநிதி

 சங்கி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும்: உதயநிதி

விழுப்புரம்: 'தமிழகத்தை புறக்கணிக்கும் டில்லி அணியை, தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும்' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

விழுப்புரம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து, அவர் பேசியதாவது:

இந்த தேர்தலில் வெல்வது டில்லி அணியா, தமிழக அணியா என்பதை முடிவு செய்து, டில்லி அணியை வீழ்த்துங்கள். தமிழக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை. தேர்தலின்போது மட்டும் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது. தமிழகத்தை எல்லா விதங்களிலும் தொடர்ந்து வஞ்சிக்கும் பா.ஜ., சங்கி கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.

'போட்டோவை காட்டி பேசுங்க!'

உதயநிதி பேசிக் கொண்டிருக்கும்போது, தொண்டர்கள் இடைமறித்து கோஷமிட்டனர். 'கையில் இருக்கும் போட்டோவைக் காட்டிப் பேசுங்கள்' என்றனர். இதனால் தன்னுடைய பேச்சை பாதியில் நிறுத்திய உதயநிதி, பழனிசாமி இருக்கும் போட்டோவை எடுத்துக்காட்டி பேசினார். 'இந்த போட்டோவில், கீழே விழுந்து கிடப்பது யார் என தெரியுதா? இப்படி விழுந்து, உருண்டு புரண்டுதான் முதல்வர் பதவியை அடைந்தார்.
பதவி வாங்கும்போது சசிகலாவிடமும் பின், தினகரனையும், அதன் பின், பன்னீர்செல்வம் காலிலும் உருண்டு புரண்டவர் தான் பழனிசாமி. அவர்களுக்கு அடுத்ததாக, இப்போது மோடி காலில் தொங்கிக் கொண்டிருக்கிறார். ஏன், அவருக்கு முரட்டு அடிமையாகவே மாறி விட்டார். அடிமைகள் கூட்டத்தின் தலைவனாக இருக்கும் பழனிசாமியை, தேர்தலில் இருந்தே விரட்டி அடிக்க வேண்டும்' என்று உதயநிதி பேசினார்.

Advertisement