/ செய்திகள் / பாஜவை பார்த்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்; நயினார் நாகேந்திரன்

பாஜவை பார்த்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்; நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: தமிழகத்தில் பாஜவை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது என்று தமிழக பாஜ தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். அவரது பேட்டி; தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் மனதில் மாற்றம் வந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஒரு திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க தமிழக அரசுக்கு சரியான அதிகாரிகள் இல்லை. சரியான வழிகாட்டுதல் இல்லை. ஒரு மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் வேண்டும் என்றால் 20 மீட்டர் இடம் வேண்டும். ஆனால் இவர்கள் 5 மீட்டர் வேண்டும், 10 மீட்டர் வேண்டும் என்று தப்புத்தப்பாக விரிவான திட்ட அறிக்கை தந்ததால் தான் மெட்ரோ ரயில் வர முடியவில்லையே தவிர, மற்றபடி வேறு ஏதுவும் இல்லை.இன்றைக்கு பாஜவை பார்த்தால் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இவர்களின் ஊழல்கள், ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், அனைத்து வழக்குகளையும் கையில் எடுத்து விடுவோம் என்பதால் இப்படி முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nesan
ஏப் 08, 2026 22:57

உமக்கு அண்ணாமலையை பார்த்தா பயம்.


Barakat Ali
ஏப் 08, 2026 20:59

அது மட்டுமில்லை ....... ஜனநாயகம், நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்றாலே திமுகவுக்கு அலர்ஜி .........


R.MURALIKRISHNAN
ஏப் 08, 2026 20:11

முதல்வருக்கு பயம் எல்லாம் இல்லை.


SUBBU,MADURAI
ஏப் 08, 2026 20:06

தொகுதி மாறி போட்டியிடும் இந்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த தேர்தலில் தோற்பது உறுதி...


Ms Mahadevan Mahadevan
ஏப் 08, 2026 19:44

மோடி வந்த பின் சாமானிய மக்கள் பயன் படுத்திய பாசஞ்சர் ரயில்களை காணும். போஸ்ட் கார்டு காணும். ரயில் நிலையத்தில் டூ வீலர் கட்டணம் கொள்ளை. பணத்தின் வாங்கும் சக்தி குறைவு. மத தக ராறு . பின் எப்படி பிஜேபி ஜெயிக்கும். ரயில் கட்டணம் உயர்வு வேறு.


Nathansamwi
ஏப் 08, 2026 21:10

நிதர்சனம் ....சொன்னால் விவேக் ப்ரோ கு கோவம் வந்துரும் ...


Kavi Priyan. Adelaide
ஏப் 08, 2026 18:57

அந்த ( அண்ணா)மலையையே ஓரங்கட்டிட்டோம், என்ற தைரியத்தில் இப்படியெல்லாம் பேசத்தான் தோன்றும் தலைவரே…! ஆனாக்கா தேர்தல் ரிசல்ட்டு அன்றைக்கும் நாம இதே டயலாக்கை பேச முடியுமான்னு யோசிக்கனும்..!