/ செய்திகள் /  தொகுதி மறுவரையறை மசோதா பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி: காங்.,

 தொகுதி மறுவரையறை மசோதா பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி: காங்.,

கோவை: தமிழகம், மே.வங்கத்தில் தேர்தல் நடக்கும்போது அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவருவது பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி என, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டி: மகளிர் இட ஒதுக்கீட்டை காங்., முழுமையாக ஆதரிக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு என்பதைக் கொண்டு வந்ததே காங்கிரஸ்தான். தொகுதி மறுவரையறை மசோதாவை, எதிர்க்கட்சி எம்.பி.,களின் முழுபலம் இருக்கும்போது கொண்டு வந்தால் தோற்கடிக்கப்பட்டு விடுவோம் என பா.ஜ.,வுக்குத் தெரியும். அதனால்தான், மே.வங்கம், தமிழகத்தில் தேர்தல் நடக்கும்போது, அவசர அவசரமாக ஏப்., 16, 17,,18ல் கொண்டு வருகின்றனர். தேர்தல் முடிந்ததும் கொண்டு வரலாமே. அதற்குள் என்ன தலைபோகிற அவசரம். தமிழகத்தின் 39 எம்.பி.,கள், மேற்கு வங்கத்தின் 28 எம்.பி.,கள் மக்களவைக்கு வந்து எதிர்த்து ஓட்டுப்போட்டு விடக் கூடாது என்ற நப்பாசையில் அவசரமாக கொண்டு வருகின்றனர். எம்.பி.,க்கள் பார்லி.,க்கு வந்துவிட்டால், பிரசாரம் நடக்காதல்லவா. பிர சாரத்தை முடக்க பா.ஜ.,வின் திட்டமிட்ட சதிதான் இது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !