/ செய்திகள் / அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர்கள் நோட்டாவுக்கு ஓட்டு?

அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர்கள் நோட்டாவுக்கு ஓட்டு?

சென்னை: அரசு ஊழியர்கள், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவன பணியாளர்களில் அதிகம் பேர், 'நோட்டா'வுக்கு ஓட்டுகளை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் கூறியதாவது: பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது, அரசு துறைகள் மற்றும் மின் வாரியம், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டோம். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., உறுதி அளித்தது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, தமிழக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு, இந்தாண்டு துவக்கத்தில் அமல்படுத்தியது. பல ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே, 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.,வும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இந்த சட்டசபை தேர்தலில், ஆட்சிக்கு வந்தாலும் நிறைவேற்றுமா என்பது சந்தேகம் தான். இரு கட்சிகளுக்கு மாற்றாக, த.வெ.க., தலைவர் விஜய்க்கு ஓட்டளித்தாலும், அவர் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. எனவே, பல அரசு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், ஜனநாயக கடமையை ஆற்றுவதுடன், தங்களின் அதிருப்தியை பதிவு செய்யும் வகையில், 'நோட்டா'வுக்கு ஓட்டளித்துள்ளனர். அதன் வாயிலாக, யாருக்கும் ஆதரவு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். எனவே, கடந்த முறையை விட, இந்த முறை, 'நோட்டா' ஓட்டுகள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajasekar Jayaraman
ஏப் 25, 2026 13:41

படித்த அறிவாளிகள் திராவிடத்தை ஆதரிப்பதற்கு பதில் நோட்டாவுக்கு போட்டாகி விட்டது நீங்கள் இந்த ஜென்மத்தில் திருந்தவே முடியாது தமிழகமும் விளங்காது.


SIVA
ஏப் 25, 2026 08:59

திமுகவின் அடிப்படை ஓட்டு வங்கியில் இந்த முறை மிக பெரிய ஓட்டை விழுந்து உள்ளது...மே4ல் உண்மை நிலவரம் தெரியும்... சிறுபான்மை ஓட்டுகளை நடிகர் விஜய் திருச்சியில் வேண்டுதல் நடத்தி கொண்டு சென்று விட்டார் சென்னையில் விசிக ஓட்டுக்களை திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களை வேட்பாளர் ஆக்கியதன் மூலம் அதிமுக கைப்பற்றியது , மற்ற இடங்களில் விசிக மற்றும் மீனவ சமுதாய ஓட்டுகள் இயல்பாகவேய நடிகர் ஜோசப் விஜய் அவர்களுக்கு சென்று விடும் எப்படி பார்த்தாலும் இந்த தேர்தலில் அதிக இழப்பு தீயமூகவிற்கு தான் .....


Modisha
ஏப் 25, 2026 08:53

திமுக அல்லது நோட்டா . நல்லா இருக்கு இவங்க அறிவு . ஜனநாயகத்தின் சாபக்கேடுகள் .


raja
ஏப் 25, 2026 08:30

காலம் காலமாய் ஓட்டு போட்ட அரசு அலுவலர்கள் ஆசிரியர்களும் ஆப்பு ...


Mecca Shivan
ஏப் 25, 2026 08:13

யாரு ? இவனுங்களா ? இவனுங்க வாங்கிற லஞ்சமே சம்பளத்தைவிட நூறுமடங்கு அதிகமாக இருக்கும் .. அதுவும் குறைந்தபட்சம். வருவாய்த்துறை, பதிவுத்துறை, போக்குவரது துறை, கனிமவளத்துறை, மருத்துவத்துறை, காவல்துறை என்று பல துறைகளிலும் ஒரு அலுவலக கீழ்மட்ட வேலையாள் கோடீஸ்வரன் இன்று


PVSR
ஏப் 25, 2026 07:28

இந்தப் புகைப்படத்தில் உள்ள கைவிரல் மை அழகாக உள்ளது ஆனால் எனக்கு போடப்பட்ட மை நெயில் பாலிஷ் மாதிரி விரல் முழுவதும் பரவி கண்றாவியாக உள்ளது.


Kasimani Baskaran
ஏப் 25, 2026 06:01

தொடர்ந்து தீம்க்காவை நம்பவில்லை என்பது ஒரு வகையில் ஆறுதல்.


sankar
ஏப் 25, 2026 05:37

நோட்டாவுக்கு ஒட்டு போட்ட உனக்கு அதிமுக ஒன்னும் செய்யாது


vijay
ஏப் 25, 2026 05:26

நோட்டோவுக்கு போடுவதற்கு பதில் போடாமலேயே இருக்கலாம்