தி.மு.க., - எம்.பி., காரில் ரூ.50 லட்சம் பறிமுதல்
சென்னை: தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான காரில், ஆவணமின்றி எடுத்து சென்ற 50 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சட்டசபை தேர்தலையொட்டி, பணம் பட்டுவாடாவை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை, சென்னை புரசைவாக்கம், தானா தெருவில், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான தேர்தல் அலுவலர்கள், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை, பறக்கும்படை குழுவினர் மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணமின்றி, 50 லட்சம் ரூபாய் எடுத்து செல்வது தெரிந்தது. முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட கார், தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன் அலுவலகத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், எழும்பூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am