Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'கழுதை மேய்ப்பது அரசு வேலை'

 'கழுதை மேய்ப்பது அரசு வேலை'

சேலம் மாவட்டம் ஆத்துாரில் நடந்த பிரசாரத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

பாலாற்றில், பல தடுப்பணைகளை ஆந்திரா கட்டியுள்ளது. தமிழக ஆறுகளில் அப்படி இல்லை. அணிலுக்கும் கூட, தண்ணீரை நாம் தான் போராடி பெற்றுத்தர வேண்டியுள்ளது.

கழுதைப்பாலில் உள்ள பால் கட்டி, கிலோ 5,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எனவே, கழுதை மேய்க்கும் தொழிலும் அரசு வேலையாக அறிவிக்கப்படும்.

தமிழகத்தில், 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி வைத்துக்கொண்டு, இலவசம் அறிவித்துக்கொண்டிருக்கிறார்ள். தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு ஓட்டு போட்டால், சாராய ஆலை அதிபர்கள் தான் ஆட்சியாளராக இருப்பர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement