/ செய்திகள் / தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
| ADDED : ஏப் 13, 2026 07:49 AM
நமது நிருபர்
திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லுார் தொகுதியில் தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., கதிரவன் போட்டியிடுகிறார். அவர் சோழங்கநல்லுார் கிராமத்தில் பிரசாரம் செய்தபோது, 'அங்குள்ள ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று சொன்ன வாக்குறுதி என்னவானது' என்று இளைஞர் ஒருவர் கேட்டார்.அதற்கு பதில் அளித்து கதிரவன் எம்.எல்.ஏ., பேசியதாவது: புள்ளம்பாடி வாய்க்காலுக்கும், ஏரிக்கும் பதினோரு வேறுபாடு உள்ளது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர். திட்ட செலவு பெரிய தொகை என்பதால், அரசு அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. தாலி கட்டிய உடனே எல்லாம் நடந்துறாது. மெதுவாகத்தான் நடக்கும். உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால செய்ய முடியாது. நீ எனக்கு ஓட்டே போட வேணாம். உன் ஓட்டும் தேவையில்லை. இவ்வாறு பேசினார்.பேசிவிட்டு, பிரசார வேனை அங்கிருந்து கிளப்பிக் கொண்டு கதிரவன் எம்.எல்.ஏ., சென்று விட்டார். அவர் பேசும்போது, கேள்வி கேட்டவரை நீ, வா, போ என்று ஒருமையில் பேசியதும், தி.மு.க., பிரமுகர் ரவி என்பவரை, டேய் லுாசு என்று மைக்கில் பேசியதும், கிராம மக்களை முகம் சுளிக்க வைத்தது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 13 )
senthilanandsankaran
ஏப் 13, 2026 17:46
திருடர்களின் கூடாரம்
EagleEye
ஏப் 13, 2026 16:51
ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர 5 வருடம் போதாதாம்
என்றும் இந்தியன்
ஏப் 13, 2026 16:42
உடலிலிருந்து வெளியேறும் கழிவு துர்வாசனை போல இருக்கின்றது திமுக எம் எல் ஏவின் பேச்சு
duruvasar
ஏப் 13, 2026 13:11
கிட்னி திருடனை ராஜ முழி முழிக்க சொன்னால் எப்படி முழிப்பார். சேறு என்றுமே சேறாகத்தான் இருக்கும்
Narasimhan
ஏப் 13, 2026 12:36
நல்ல தமிழ் பேச சுட்டுப்போட்டாலும் வராது.
Anbuselvan
ஏப் 13, 2026 12:20
வோட்டை சாட்டையாக மக்கள் நினைப்பர்
NRV
ஏப் 13, 2026 11:47
திராவிட மாடல் அப்படித்தானே இருக்கும் .
ram
ஏப் 13, 2026 10:56
திமுகவில் இருக்கும் அனைவரும் இப்படி தான்
sengalipuram
ஏப் 13, 2026 10:46
தி மு க வழி தோன்றல் பின்ன எப்படி பேசுவார் ..
ஆரூர் ரங்
ஏப் 13, 2026 10:18
கருணாநிதி அண்ணா வழியில் அயராதுழைக்கிறார் கிட்னி கதிரவன்.
மேலும் கருத்துகள்
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am