Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜய் நேரில் வந்து பேசுவது போல் பிரசாரம்; புதிய தொழில்நுட்பத்துடன் களம் இறங்கிய வேட்பாளர்

விஜய் நேரில் வந்து பேசுவது போல் பிரசாரம்; புதிய தொழில்நுட்பத்துடன் களம் இறங்கிய வேட்பாளர்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

தஞ்சாவூர்: லேசர் ஹாலோகிராபி தொழில்நுட்பம் பயன்படுத்தி, விஜய் நேரில் வந்து பேசுவது போல் பிரசாரம் செய்கிறார் தஞ்சை தவெக வேட்பாளர்.

ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு நூதன உத்திகளை கையாண்டு வருகின்றனர். அதேபோல, அரசியல் கட்சிகளின் தலைவர்களும், புதுப்புது உத்திகளை பயன்படுத்துகின்றனர்.
புதிதாக களத்துக்கு வந்துள்ள விஜய் கட்சிக்கு, பிரசாரம் செய்வதில் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. ்பிரசாரத்துக்கு அனுமதி பெறுவது, அனுமதி கிடைத்தாலும் கிளம்பி வருவது, வந்தாலும், தாமதமாக வருவது, பேசாமலேயே சென்று விடுவது என விஜய் கட்சி வேட்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.

இதனால் விஜய் போல பொம்மை பயன்படுத்தியும், கலைஞர்களுக்கு விஜய் போல வேடமிட்டும் , விஜய் போன்ற முக மாஸ்க் அணிந்தும் சில வேட்பாளர்கள் நூதன முறையை கையாண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோத் ரவி, ஹாலோகிராபி தொழில்நுட்பம் மூலம், தனது பக்கத்தில் விஜய் நின்று பேசி ஓட்டு கேட்பது போன்று செய்துள்ளார். இந்த தொழில்நுட்பம், தமிழக தேர்தலுக்கு இப்போது தான் அறிமுகம் ஆகியிருப்பதாக கூறுகின்றனர் அவரது கட்சி நிர்வாகிகள்.
சற்று தொலைவில் இருந்து பார்க்கும் அனைவருக்கும் விஜய் நேரில் வந்து பிரசாரம் செய்வது போலவே இருக்கிறது. வேட்பாளரின் இந்த நுாதன முயற்சியை, தவெகவின் பிற வேட்பாளர்களும் பயன்படுத்துவது பற்றி ஆர்வத்துடன் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

ஆக ஆக ஆஹா ! இது பொம்ம பீசு இல்லையில்லை இது டம்மி பீசூ.இந்த தர்க்குரி கூட்டத்துக்கு முதலையமிச்சர் ஆகணுமாம்.ஆசையைப் பாரு.முதலை மந்திரி பதவி இவரு வீட்டு சொத்தா? எனிக்கி அண்டா கிடைக்கல.

Reply Rate this
ஏப் 13, 2026 05:24 pm

விஜயை பிரச்சாரம் பண்ண விடமாட்டீர்கள்?. ஏகப்பட்ட கேள்வி கேட்பீர்கள்? . அப்படியே கொடுத்தாலும் ரொம்ப நேரம் கொடுக்கமாட்டீர்கள்.? அவர்களுக்கு தெரிந்த முறையில் பிரச்சாரம் செய்கிறார்கள். எதேதோ பழியை போட பார்க்கிறார்கள். இதையும் தாண்டி த வெ க நல்ல ஓட்டு வாங்கும்.திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தாலே மக்கள் தப்பித்துவிடுவார்கள்.

Reply Rate this
ஏப் 13, 2026 05:15 pm

நமது திராவிட கும்பல் எம்ஜிஆர் அண்ணா துரை கருணாநிதி ராம்சாமி என அனைவரையும் ஹாலோகிராம் பிரசாரத்தில் கொண்டு வரும்..எம்கேடி பாகவதரைக்கூட கொண்டு வரலாம்.. ஆனால் அவர் முகத்துக்காக ஒருக்கால் ஓட்டு போடும் கூட்டம் இருந்தால், அது மேலே போய் ரொம்ப காலமாகிஇருக்கும் என்பதால்....நோ யூஸ்..

Reply Rate this
ஏப் 13, 2026 04:49 pm

மக்களுக்கு காதுல பூ. தலையில் டோப்பா..

Reply Rate this
ஏப் 13, 2026 01:45 pm

திரு. சுஜாதா "என் இனிய இயந்திரா" வை சுமார் 1980 களில் எழுதினார். அப்போது கதை நடக்கும் காலம் 2020 என்று கூற பட்டிருந்தது என்று நினைக்கிறேன். அதாவது சுமார் 40 வருடம் கழித்து உலகத்தில் அரசியல், நாடு எப்படி இருக்கும் என்று எழுதினார்.


இப்போது 2026 இல், சுமார் 46 வருடம் கழித்து அதில் சொல்ல பட்டிருக்கும் ரோபோ நாய்க்குட்டி ஜீனோ போலவும், ஹாலோகிராம் போலவும் உண்டாக்க படுவது குறித்து மகிழ்ச்சியே ஆனாலும் கதையில் கூறியிருக்கும் தொழில்நுட்பங்களில் சுமார் 15% கூட இன்னும் உருவாக்க முடியவில்லை என்பதே உண்மை.

Reply Rate this
ஏப் 13, 2026 01:24 pm

ஒரே தலைவன் எல்லா தொகுதிக்கும் வரமுடியுமா? சூப்பர். அம்புட்டுதான்.

Reply Rate this
ஏப் 13, 2026 12:41 pm

வீடு வீடா போய்... ஒவ்வொரு வாக்காளரைச் சந்தித்தும், அவர்களில் கால்களில் விழுந்தும் ஓட்டு கேட்டாவே போடமாட்டேங்குறாங்க...? ஏஐ..ல ரெடி பண்ணி பிரச்சாரம் பண்ணா ஓட்ட போட்டுடுவாங்களா...? ஏண்.. தமிழ்நாட்டு வாக்காளர்களை மாக்கான்னு நினைச்சிட்டீங்களா..?

Reply Rate this
ஏப் 13, 2026 12:22 pm

"என் இனிய இயந்திரா"" என்று ஒரு நாவல் எழுத்தாளர் சுஜாதாவுடையது

அதில் அரசியல் கட்சி தலைவர் நேரில் வர முடியாமல் 3D வடிவில் தோன்றி மாநாட்டில் பேசுவார்

அது இவ்ளோ சீக்கிரம் நடைமுறைக்கு வரும் என்று நினைக்க வில்லை

Reply Rate this
ஏப் 13, 2026 12:15 pm

இவரும், ரசிகனுங்க போடும் ஆட்டம் தாங்க முடியலே. சீக்கிரமா தேர்தல் முடிந்து இந்த கொசுக்கள் தொல்லையில் இருந்து மீளனும்.

Reply Rate this
ஏப் 13, 2026 12:04 pm

விஜய் கட்சியினர் எது செய்தாலும் அதில் குறை காண்பதில் ஒரு திருப்தி இருக்கிறது. கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வதுபோல் கல்யாணமான புதிதில் மனைவியை அடித்தால் ஏன்டா புதுப் பெண்ணை அடிக்கீறீங்க என்பீங்க, 6 மாசம் கழித்து அடித்தால் ஏன்டா புள்ளதாச்சியை அடிக்கிற என்பீங்க, சரி புள்ள பிறந்ததற்கு பிற அடிச்சா ஏன்டா பச்சைபிள்ளைக் காரியை அடிக்கிற என்பீங்க. இப்படித்தான் விஜய்யின் நிலைமையும்.

Reply Rate this