/ செய்திகள் / திமுக டோக்கன் வினியோகம்; இன்று விசாரிக்கிறது ஐகோர்ட்

திமுக டோக்கன் வினியோகம்; இன்று விசாரிக்கிறது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன்களை, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வினியோகம் செய்வதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (ஏப்ரல் 17) விசாரணைக்கு வரவுள்ளன. சென்னை துறைமுகம் தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.மனோகர் சார்பில், வாக்காளர்களுக்கு பணம் வழங்க, 'கியூஆர்' குறியீடுடன் கூடிய, 10,000 ரூபாய்க்கான டோக்கன்கள் வினியோகம் செய்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், வழக்கறிஞர் ஷியாம் குமார் என்பவர் முறையீடு செய்தார். இதேபோல், தி.மு.க. வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு 8,000 ரூபாய்க்கான கூப்பன்களை வழங்கி வருவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறும், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் என்பவரும் முறையிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், 'மனு தாக்கல் செய்தால், இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்' என, தெரிவித்தனர். அதன்படி, நேற்று மாலையில் இவ்விவகாரம் தொடர்பாக, வழக்கறிஞர் கே.ரவீந்திரன், வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆகியோர், தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

V Venkatachalam, Chennai-87
ஏப் 17, 2026 14:42

எலக்ஷனுக்கு இன்னும் ஒரு அஞ்சு நாள் இருக்குங்களே. அதுக்குள்ள என்னா அவசரம்? இல்லாகட்டி எலக்ஷன் முடிஞ்சு விசாரிக்கலாமே. படு தமாஷா இருக்கும்.


Anbuselvan
ஏப் 17, 2026 14:35

விசாரிச்சா மட்டும் போறாது, உடனே தீர்ப்பு சொல்லோணும் நாட்டாமை. இல்லையெனில் இதுவும் இன்னொரு வழக்கு அவ்வுளவுதான்.


MUTHU
ஏப் 17, 2026 13:15

விசாரணை, கைப்புள்ள காமெடி மாதிரிதான் முடியும்.


ஆகுயர்த்தோன்
ஏப் 17, 2026 11:43

என்ன ஜட்ஜ் எங்களுக்கு 2 டோக்கன் வேண்டும் என்று கேட்காமல் விட்டால் போதும் , இதில் இருந்து ஒன்று தெரிகிறது எந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதி அந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பு பெறவில்லை என்று தெரிகிறது


Keshavan.J
ஏப் 17, 2026 11:19

பெண்கள் கையில் கிடைக்கும் இந்த 8000 ரூபாய் டோக்கனை கொண்டு போய் சேட்டு கடையில 6000 ரூபாய்க்கு விற்று டாஸ்மாக்ளெ கொண்டு போய் குடிப்பானுங்க இந்த ட்ராவிடிய புருஷனுங்க .


kjpkh
ஏப் 17, 2026 10:53

மனுதாரர் சரியான ஆதாரங்களை கொடுக்கவில்லை. இது விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனால் இதை தள்ளுபடி செய்கிறேன். போதும்ங்களா.


kjpkh
ஏப் 17, 2026 10:50

இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலம் என்று மார் தட்டி ஜம்பம் அடிக்கும் முதல்வர் இதை எல்லாம் கண்டிக்க வேண்டாமா. எடப்பாடிய பார்த்து அவ்வளவு பயமா. பத்து தோல்வி பழனிச்சாமி என்று சொல்கிறீர்கள். ஆனால் அவரை ஜெயிப்பதற்கு நீங்கள் இந்தப் பாடு பட்டு வருகிறீர்கள். இப்படி எல்லாம் செய்து கிடைக்கும் வெற்றி பெருமைக்கு உரியது அல்ல. நீங்கள் ஜெயிச்சாலும் வெற்றியாளர் எடப்பாடி பழனிச்சாமி தான். மேல்மட்டத்தில் இருந்து அடிமட்ட திமுக தொண்டன் வரை ஓடி ஓடி வேலை பார்க்க வைத்துவிட்டார்.


sankar
ஏப் 17, 2026 10:49

கேவலமான அரசியலின் கேடுகெட்ட நாயகன் தீயசக்தி திமுக


KRISHNAN R
ஏப் 17, 2026 10:38

சரி சரி வரும் ஆனா.......,,, வருமா


சூர்யா
ஏப் 17, 2026 09:49

ஒண்ணும் அவசரம் இல்ல 23 ஆம் தேதிக்கு அப்புறம் பொறுமையா விசாரிங்க. யாரையாச்சும் மெரினாவில பொதக்கிற கேசா இருந்தா மட்டும் ராத்திரில கூட விசாரிப்பீங்க!


Field Marshal
ஏப் 17, 2026 10:37

புதைக்கிறது அந்த நேரத்தில் அவசியமாக கருதப்பட்டது .. இஸ்லாமிய முறைப்படி குறிப்பிட்ட காலம் கடந்து கல்லறைகளை கலைத்து பள்ளிவாசல் போன்ற கட்டிடங்கள் கட்டுவது நடைமுறையில் இருக்கிறது .. மெரினாவில் அமல் படுத்த வழக்கு தொடரலாம் ..கேஸ் வேற வேஸ்ட்டா எரியுது