வீடு வீடாக செல்லும் தி.மு.க., இளைஞரணி: த.வெ.க., நெருக்கடியை சமாளிக்க திட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
த .வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, துணை முதல்வர் உதயநிதி சில ஆலோசனைகளை கூறியுள்ளார். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., தலைவர் விஜய்க்கு இளைஞர்களிடம் அமோக ஆதரவு பெருகுகிறது. அவர்களின் ஓட்டுகள் தி.மு.க.,விற்கு விழுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உதயநிதி அறிவுரையின் பேரில், மாநிலம் முழுதும் உள்ள 5 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள், வீடு வீடாக செல்ல உள்ளனர். ஒவ்வொரு பூத்திற்கும் தலா, 10 இளைஞர்கள் வீடு வீடாக சென்று, இலவச லேப்டாப், நான் முதல்வன், புதுமைப்பெண், காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக்கூறி, துண்டு பிரசுரங்களை வழங்கி இளம் வாக்காளர்களை ஈர்க்க உள்ளனர். இந்த பணிகள் இன்று முதல் 10ம் தேதி வரை, 11ம் தேதி முதல், 20ம் தேதி வரை என, இரு கட்டங்களாக நடக்க உள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am