ஒரு தொகுதியையாவது மாற்றித்தர அ.தி.மு.க.,விடம் வலியுறுத்தும் பா.ஜ.,
சென்னை: 'புதுக்கோட்டை, கந்தர்வ கோட்டை ஆகிய தொகுதிகளில், ஒன்றை கொடுத்து விட்டு, வேளச்சேரியை பெறுங்கள்' என, தமிழக பா.ஜ., மையக் குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலிடம் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக பா.ஜ., மையக் குழு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், நேற்றிரவு நடந்தது. இதில், பீயூஷ் கோயல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்து, கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கூட்டத்தில், 'பா.ஜ.,வுக்கு ஒதுக்கிய, 27 தொகுதிகளில் பல தொகுதிகள் சரியான தேர்வாக இல்லை. அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும், வேட்பு மனு தாக்கலுக்கு ஏப்., 6ம் தேதி தான் கடைசி நாள். எனவே, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய தொகுதிகளில், ஏதேனும் ஒன்றை அ.தி.மு.க.,விடம் வழங்கிவிட்டு, ஒரு தொகுதியையாவது மாற்றி தர வலியுறுத்த வேண்டும். வேளச்சேரியை கேட்டு பெறுங்கள்' என, பீயூஷ் கோயலிடம், அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு, 'இது சரிப்பட்டு வருமா' என, பீயூஷ் கோயல் கேட்டுள்ளார். 'பா.ஜ., வேட்பாளர்கள் ஏப்., 4ல் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அன்று, பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். எனவே, 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளது. கேட்டால் கிடைக்க வாய்ப்புள்ளது' என, தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியிடம், இரவே தொலைபேசியில் பேசுவதாக பீயூஷ் கோயல் தெரிவித்தார். பிரதமரின் தமிழக வருகைக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
பழனிசாமி சற்று அண்ணாமலையும் சந்தித்து இருவரும் மனம்விட்டு பேசி நல்ல முடிவை பெறவேண்டும்அண்ணாமலையிடம் தேர்தல் விறுவிறுப்பு அதிகம் உண்டு .அதை பழனிசாமி சரியான முறையில் பயன்படுத்தினால் அ.தி.மு.க. விற்கே நல்லது .பழையதை மறந்துவிட்டுத்தான் அரசியலில் முன்னேற வேண்டும். யாரிடம் குற்றம் குறைகள் இல்லை.எல்லோரிடமும் இருக்கின்றன. சீக்கிரமே இதற்கு ஒரு முடிவு வரும் அண்ணாமலையும் தேசிய ஜனநாயக பேரணியின் தேர்தல் பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்.இரு கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்துப்பேசுவார் எல்லா அ.தி.மு.க. வேட்பாளர்களும் அவருக்கு நண்பர்களாகிவிடுவார்கள் பழனிசாமியுடன் சென்றே வாக்கு சேகரிப்பார் இது விரைவில் நடக்கும் நடக்கும் நடக்கும்.
அண்ணாமலை போட்டியிட்டால் என் வாக்கு பாஜகவிற்கு....இல்லாவிட்டால் சுயேச்சைக்கு...
ஒரு தொகுதியை மாத்தினா மட்டும் அறுத்து தள்ளீருவாங்களாக்கும்? அங்கேயும் நோட்டாவோட போட்டி தானே?
தமிழகத்தில் பாஜகவை எப்படி வளர்த்து இருந்தார் திரு அண்ணாமலை அவர்கள், இப்போது நிலைமை அடிமை நிலைமையாகி விட்டதே என்கிற வருத்தம் என்னை போனற பாஜக அனுதாபிகளுக்கு நிவையவே இருக்கிறது. இந்த தடவை பாஜகவிற்கு வோட்டு போடுவோம். நிலைமை இப்படியே தொடர்ந்தால், அடுத்த லோக் சபா தேர்தலுக்கு என்னை போன்றவர்களின் வோட்டுக்கு பாஜகவிற்கு உத்திரவாதிமில்லை.
இவர்களோடு கூட்டணி சேர்ந்ததற்கு எடப்பாடியார் அனுபவிக்கிறார். எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் களத்தில் நெருப்பா இருக்கிறார்கள். ஆனால் பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அடிதடி. காலத்தின் கொடுமை.
என் அனுமானம்....தேர்தல் முடிந்த பின் முடிவுகள் எதுவாயினும் பழனிச்சாமிக்கு பெரிய ஆப்பு காத்திருக்கு.....!!!

அமீத் ஷா ஒருவர் எப்படி தமிழ் நாடு அரசியலை கணிக்க முடியும் என்று யோசித்து ஒரு வலிமையான நபரை அதிமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை சொல்ல வைத்து இருக்க வேண்டும்.