அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அனைத்து கட்சியின் வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபிக்கு தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டு உள்ளார்.சென்னை கொளத்தூரில் பிரசாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே கொளத்தூரில் பிரசாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என விஜய் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளார்.
விண்ணப்பம்
ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட் அனுமதி உள்பட, 13 அனுமதிகளுக்கு 'சுவிதா' இணையதளம் மூலமாக 48 மணி நேரத்துக்கு முன்பாக விண்ணப்பிக்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am