Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பா.ஜ.,வில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஐக்கியம்

பா.ஜ.,வில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஐக்கியம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்

ஒலிம்பிக் பதக்கம் பெற்ற டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், இன்று பாஜ கட்சியில் இணைந்தார். அவர் மேற்குவங்கத்தில் பாஜவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

மேற்குவங்கத்தில் 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23ம் தேதியும், 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜ தலைமையிலான கூட்டணியும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது.

இந்த பரபரப்பான சூழலில் டில்லியில் இன்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முன்னிலையில், ஒலிம்பிக் பதக்கம் பெற்ற டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், இன்று பாஜ கட்சியில் இணைந்தார். அவர் மேற்குவங்கத்தில் பாஜவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

தற்போது லியாண்டர் பயஸ்க்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது அவரது ரசிகர்கள் மற்றும் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement