நா.த.க., மீது தேர்தல் விதிமீறல் வழக்கு
காரைக்குடி: தேர்தல் விதிகளை மீறியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. அன்றைய தினம் மாலை 6:00 மணிக்குள் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டுஇருந்தது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன்தினம் காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது, 6:05 மணிக்கு மேல் ஆகியும் சீமான் தன் பேச்சை முடிக்கவில்லை. இதையடுத்து, தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீதும், நா.த.க., நிர்வாகி ரவிச்சந்திரன் மீதும், காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am