இன்று உங்களுக்கான காலம்... காத்திருக்குது களம்...!
- நமது நிருபர் -
வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறை என்பது, சோழர் காலத்தில் இருந்துள்ளது. இடைக்கால சோழர்களின் ஆட்சி காலத்தில், கி.பி., 9ம் நுாற்றாண்டு முதல் கி.பி., 16ம் நுாற்றாண்டு இந்த குடவோலை முறை தேர்தல் நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.பி., 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்துக்கு உட்பட்ட மூன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.
இதில் இரண்டு, காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன. இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் ஓட்டுச்சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவர் முதலாம் பராந்தக சோழன். அன்றில் இருந்து இன்று வரை, ஓட்டுப்பதிவு முக்கியத்துவம் பெற்று வருகிறது.
நாம் அளிக்கிற ஓட்டு, தமிழகத்தின் அடுத்த ஐந்தாண்டுகளை தீர்மானிக்க உள்ளன. ஜனநாயக அரசமைப்பின் வாயிலாக, நமக்கு கிடைத்திருக்கும் உரிமைகளுக்கான ஆதாரம். திறமையான அரசாங்கமும், அது சார்ந்த அமைப்புகள் அமைய நாமும் ஒரு காரணமாக இருக்க வேண்டும். அப்படி, ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவதில் நமக்கும் பங்களிப்பு இருக்கிறது என்பதை உணர செய்வது தான் ஓட்டுரிமை. 100 சதவீதம் ஓட்டுரிமை பெறுகிற போது தான், முழுமையான ஜனநாயகம் நமக்கு வந்தடைகிறது.
நம் ஒவ்வொருவருடைய அரசியல் கருத்துகள் வேறுபட்டிருக்கலாம். அரசியல் ரீதியில் நமது விருப்பங்களும், நோக்கங்களும் வேறுபட்டிருக்கலாம். அதை ஜனநாயக வழியில் நின்று வெளிப்படுத்தும் வாய்ப்பை ஓட்டுரிமை வழங்குகிறது. மக்களின் வாழ்வும், எதிர்காலமும், அரசு நிர்வாகங்களையும், அதன் முடிவுகளையுமே நம்பியிருக்கும் அரசியல் களத்தில், மக்களாட்சியில் அங்கம் வகிக்கும் நாம் ஒவ்வொருவரும், தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.
ஜனநாயக கடமையை செலுத்த, வெளிநாடுகளில் இருந்து வந்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. அதே நேரத்தில், ஓட்டளித்தால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது என்று, இன்று ஓட்டளிக்காமல் இருந்து விட்டு, பின், ஆட்சியாளர்களை குறை கூறுவது எவ்வகையிலும் நியாயம் இல்லை.
இன்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, உங்களுக்கான காலம். சிந்தித்து செயல்பட கிடைத்திருக்கும் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்.
Advertisement
அதிமுக - காரங்க யாருக்கெல்லாம் காசு குடுத்திருக்காங்கன்னு , டீடைல் லிஸ்ட் டிஎம்கே கையில் வச்சிருக்காங்க , அந்தந்த வார்டு டிஎம்கே கௌன்சிலர் அல்லது வட்டம் - இவங்க கும்பலா அந்தந்த வீடுகளுக்கு போயி , தேர்தல் அதிகாரிகள் போல பேசி , வாக்காளர் சீட்டை வாங்கிட்டு போய்ட்டாங்க , , , மேலும் பல இடங்களில் , ஆயிரம் குடுத்தாங்களா , வாகு சீட்டை குடுங்க , நாங்க ரெண்டாயிரம் வாங்கித்தாறோம்னு சொல்லி ஆசை காட்டி வாக்கு சீட்டை வாங்கிட்டு போயிட்டாங்க , காசும் வரல ஆளும் காணோம் , சூப்பரா கள்ள ஓட்டு போட்ருவாய்ங்க போல . . . எப்படியெல்லாம் ஏமாத்தறாய்ங்க ? . . . . எலெக்சன் வேலை , பாக்கறதில , டிஎம்கே தான் , பிஹெச்டி வாங்கிருக்காய்ங்க போல . . .. இவிங்கட்ட தப்பிச்சு ஓட்டு போடுவது , ஜனங்களுக்கு , ரொம்போ கஷ்டம் - - -
"வாய்மை வெல்லுமா?" இல்லை "வாய் மையை வெல்லுமா?" பொறுத்திருப்போம். "காலம் என்றுமே பேசாது காத்திருந்தாலும் பதில் சொல்லாது" என்பதுதான் இதுவரையில் உண்மை
தலைவிதியை நிர்ணயிக்கும் நாள். ஏதோ இலவசங்கள் அள்ளிக்கொடுக்கிறார்களே, அவர்களே நல்லவர்களே என்று கருதாதீர்கள். நல்ல பாம்பு என்ற பெயருடன் படமெடுத்து ஆடி நம்மை மயக்குவது கொத்தி உயிரைப்பறிக்கிறதற்காகவே என்பதை நினைவு கொள்ளுங்கள். சொந்தப்பணத்திலிருந்து ஒன்றும் குடுக்கவில்லை. உங்கள் பணத்தையே சிறிது கொடுத்து அவர்கல் சொந்த நிதி சேர்க்கவே நீங்கள் உரிமை கொடுக்கலாமே. அவர்கள் கொள்ளையடிக்கும் கோடான கோடி உங்கள் நலனுக்காகவே செலவு செய்யக்கூடிய நல்லவர்கள் உள்ளார்கள். அவர்களை தேர்ந்தெடுங்கள். இறை துணை புரியட்டும். வாழ்க வளமுடன்.
இன்று அரசியல்வாதிகள் காலம்... காத்திருக்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம், ரௌடிகளின் அட்டுழியம், ஆள் கடத்தல், கோவில் சொத்துக்கள் அபகரிப்பு, நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவது...
அரசியலை ஒரு தொழிலாக மாற்றி அதை வைத்து பிழைப்பு நடத்தும் திமுகவை விரட்டி அடியுங்கள் மக்களே

பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் தண்ணீர் பற்றாக்குறை, மின்வெட்டு, மின்கட்டண உயர்வு , பத்திரப்பதிவுக் கட்டணம் உயர்வு, பட்டாசு ஆலை தீவிபத்து, அன்றாடம் மைனர் பெண் / சிறுமி கற்பழிப்பு, மாணவி கற்பழிப்பு, தீவிரவாதியை அப்பா என்று அழைத்தல், வேலையில்லாத் திண்டாட்டம் இதையெல்லாம் பேசக்கூடாது .... அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும் .......