ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு வாங்குவதும் தப்பு: சொல்கிறார் செந்தில் பாலாஜி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவை: ''ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு; வாங்குவதும் தப்பு,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரான, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்போடு தேர்தல் பணியாற்றியுள்ளோம். வாக்காளர்கள் எங்களுக்கு வெற்றி தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தேர்தலை சுமுகமாக நடத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளோம். தோல்வி பயத்தில் அ.தி.மு.க.வினர் வன்முறையை துாண்டும் வகையில் செயல்படுகின்றனர். தெற்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியை உணர்ந்து விட்டார். அதனால், ஏதேதோ குறை சொல்கிறார். அமைதியான மண்ணை கலவர பூமியாக மாற்ற முயற்சிப்பதை ஏற்க முடியாது. அது பலிக்காது. பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு சொல்லலாம். ஏதேனும் ஒரு இடத்தில் நிரூபிக்க வேண்டும். ஓட்டுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்; யார் வாங்குகிறார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் தப்பு; வாங்குவதும் தப்பு. தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள் என்ற தகவலை முழுமையாக மறுக்கிறேன். ஆதாரம் இருந்தால், மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுவாக கொடுக்கலாம். தேர்தல் நடத்துவது மத்திய அரசின் தேர்தல் ஆணையம். கலெக்டர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ளனர். பறக்கும் படையினர், சி.ஆர்.பி.எப்., போலீசார் இருக்கின்றனர். இதில், ஓட்டுச்சாவடியை நாங்கள் எப்படி கைப்பற்ற முடியும்? பா.ஜ., கூட்டணியில் இருப்பதால் அவர்கள் வேண்டுமானால், கைப்பற்ற முயற்சிக்கலாம். தோல்வி விரக்தியில் என்ன பேசுகிறோம் என தெரியாமல், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு, கூறினார்.
அண்ணாமலைக்கு சொத்து வந்தது எப்படி?
'செந்தில்பாலாஜி ஒரு காந்தி இல்லை... என அண்ணாமலை கூறியிருக்கிறாரே...' என, ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, செந்தில்பாலாஜி பதிலளிக்கையில், ''ஒரு வாட்ச்க்கு பில் கேட்டோம்; கடைசி வரை கொடுக்காமல், மளிகை கடை துண்டு சீட்டு போல் கொடுத்தார். விமானத்தில் ஏறி 'எமர்ஜென்சி' வழியை திறந்தனர். மன்னிப்பு கடிதம் கொடுத்து விட்டு வெளியே வந்தனர். வீட்டு வாடகை நண்பர்கள் தருகின்றனர்; சாப்பாட்டுக்கு காசு தருகின்றனர் என்றார். ஆயிரக்கணகான கோடியில் சொத்து வாங்குகிறார். இந்த சொத்தை எப்படி சம்பாதித்தார். 4 ஆட்டுக்குட்டி வைத்திருக்கிறேன்; அது போதும் என்றார். கோவையில் எத்தனை ஏக்கர் சொத்து வாங்கியிருக்கிறார்; அதன் மதிப்பு என்ன. எங்கிருந்து அந்த பணம் வந்தது. மண்வெட்டி எடுத்து வெட்டுனாரா. 1,000 ஆடு வாங்கி, தோட்டத்தில் மேய்த்தாரா, அவை குட்டி போட்டு, சந்தையில் விற்று, பூமி வாங்கினாரா. குற்றச்சாட்டு சொல்பவர் தியாகியாக இருக்க வேண்டும். 50 ஆண்டுகளில், 30 ஆண்டுகள் பொது வாழ்வில் இருக்கிறேன். என்னை பற்றி மக்களுக்கு தெரியும்,'' என்றார்.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 178 )
தமிழக மக்களுக்கு மூளை இல்லைன்னு இவனுகளே தீர்மானம் பண்ணிட்டானுங்க போல. தப்புன்னு சொல்லுவது யாரு செ பா.
அடடா யார் இத சொல்றது யோகியன் வர்றான் சொம்பு எடுத்து உள்ள வை ஸ்டாலினால் மிகக் கேவலமாக பேசப்பட்டவர் தான் இந்த செந்தில் பாலாஜி அதே போல் நாட்டு விடுதலைக்காக ஓராண்டு சிறை சென்றவர் இந்த செந்தில் பாலாஜி அதே போல் அவருடைய தம்பி அசோக் குமார் தலைமறைவாக இருந்தவர் இப்படிப்பட்ட பின்புலம் உள்ளவர் தான் இந்த செந்தில் பாலாஜி அவர் சொல்வது என்னவென்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பு வாங்குவதும் தப்பு அப்படின்னு யார் சொல்றது தமிழ்நாட்டுக்கு தெரியாதா செந்தில் பாலாஜி பற்றி..
அடடா யார் இத சொல்றது... அவருடைய தம்பி அசோக் குமார் தலைமறைவாக இருந்தவர் இப்படிப்பட்ட பின்புலம் உள்ளவர் தான் இந்த செந்தில் பாலாஜி அவர் சொல்வது என்னவென்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பு வாங்குவதும் தப்பு அப்படின்னு யார் சொல்றது தமிழ்நாட்டுக்கு தெரியாதா செந்தில் பாலாஜி பற்றி..
இப்படிப்பட்ட பின்புலம் உள்ளவர் தான் இந்த செந்தில் பாலாஜி அவர் சொல்வது என்னவென்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது தப்பு வாங்குவதும் தப்பு அப்படின்னு யார் சொல்றது தமிழ்நாட்டுக்கு தெரியாதா செந்தில் பாலாஜி பற்றி..
பணமாக கொடுப்பது தவறு ஆனால் தங்க காசு வெள்ளி பொருள்கள் என்று கொடுக்கலாம் ஹி ஹி
ஊரில் பலரையும் அப்பா என்றும் father என்றும் அழைக்கும் இழிநிலைக்கு என்ன பெயர் செந்தில் ?
9 கிராம் தங்க காசு,8500 டோக்கன் எல்லாம் தரலாம் ஓட்டுக்கு பணம் தரவோ வாங்கவோ கூடாது என்று தேர்தல் முடிந்த எட்டாம்நாள் அறிக்கை விடும் அரிச்சந்திரன், தானே ஓட்டுப்போடாது ‘ஜனநாயக’ கடமை ஆற்றியவர்1
இது உண்மைதான், ஒத்துக்கொள்வோம்
அரசு பதவிகளில் இருப்பவர்கள் தினமும் பலவித மாமூல்கள் வாங்குவது தவறில்லையா செந்தில் பாலாஜி?
இவர் சொல்றதயெல்லாம் கேக்கணும்ன்னு நமக்கு தலையெழுத்து.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am