/ செய்திகள் /  மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள்  அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு  

 மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள்  அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை 24 மணி நேரமும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டபை தேர்தலையொட்டி தொகுதி வாரியாக ஓட்டுபதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி(தனி) சட்டசபை தொகுதியில் 370 ஓட்டுச் சாவடிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் ரிசர்வுடன் தலா 444 கன்ட்ரோல் யூனிட், மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், 30 சதவீதம் கூடுதல் ரிசர்வுடன் 481 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. கள்ளக்குறிச்சி(தனி) சட்டசபை தொகுதிக்கு தேவையான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வந்து அறையில் வைத்து 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன், சி.சி.டிவி., கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்கள் இரண்டாம் கட்ட சுழற்சி மேற்கொள்ளப்பட்டு அதில் ஓட்டுச்சாவடி வாரியாக இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. வரும் 30ல் துவங்கி ஏப்., 6 ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். 9 ம் தேதியுடன் வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடையும். தொடர்ந்து அந்தந்த தொகுதிக்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களின் பேலட் யூனிட்டில், வேட்பாளர் பெயர், போட்டோ, சின்னம் ஆகியவை பேலட் ஷீட்டில் பொருத்தப்பட்டு தேர்தலில் நாளில் ஓட்டுபதிவுக்கு பயன்படுத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !