/ செய்திகள் / குதிரை பேர விவகாரம்: காங்., - எம்.பி.,க்கள் மோதல்

குதிரை பேர விவகாரம்: காங்., - எம்.பி.,க்கள் மோதல்

- நமது நிருபர் - குதிரை பேர விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதை குறிப்பிட்டு, 'குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். அவருக்கு பதிலடி அளித்து காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, வெளிப்படையாக த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். இதில் ஏன் இவ்வளவு கதறல்?' என கூறியிருந்தார். இந்நிலையில், அவர் சார்ந்துள்ள காங்கிரசை சேர்ந்த மற்றொரு எம்.பி., ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கை: த.வெ.க., தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது. குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியிலிருந்து யார் நியாயப்படுத்தினாலும், அது தவறானது. தமிழகத்தில் குதிரை பேரத்தை ஆதரிக்கும்; தமிழகத்திற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை, காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி, கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ramkumar kumar
மே 27, 2026 19:36

இவர்கள் இரண்டு பேரும் கழுதை பேரம் நடத்திய கட்சியின் உறுப்பினர்கள் தான்


ஜெகதீசன்
மே 27, 2026 17:06

இந்த ஒரு முறை அம்மணி சரியாக சொல்லி இருக்காங்க. பாஜக செய்யும் அரசியல் விளையாட்டை வேறு மாநிலத்துல எதிர்த்து விட்டு அதே விளையாட்டிற்கு தமிழகத்துல தவெகவுக்கு ஜால்ரா போடுவது முரண்பாடு தானே.


shanmukchand
மே 27, 2026 11:09

when this happens to congress, manik should welcome it.


S SRINIVASAN
மே 27, 2026 09:17

குதிரை பேரம் என்று கழுதைகள் பேசுவது ஆச்சரியம் தான்.


பேசும் தமிழன்
மே 27, 2026 08:00

திமுக ஆட்சியின் போது.... அதிமுக ஆட்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு... திமுகவில் சேர்ந்த போது... அது எந்த வகையான குதிரை பேரம் ?


Haja Kuthubdeen
மே 27, 2026 18:25

அரசியல் தெருஞ்ச மாதிரி உளராதே அண்ணாமலை தமிழா... எந்த எம்எல் ஏ அஇஅதிமுகவை விட்டு வெளியே போணார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸ் வைத்தி மனோஜ் போன்றோர் சட்டசபையின் கடைசி தொடருக்கு பிறகே திமுகவில் சேர்ந்தனர். சேகர் பாபு ..அனிதா..கேகேஎஸ்எஸ்ஆர் போன்றோர் கட்சியில் இருந்து நீக்கிய பிறகே சென்றனர் ஊமை தமிழா..


ராமகிருஷ்ணன் பரமக்குடி
மே 27, 2026 06:49

இவர்கள் விஷயத்தில் குதிரை பேரம் என்று சொல்வது குதிரைகளை அவமானபடுத்துவது போல உள்ளது. வேறு இழி பிறவிகளை சொல்லலாம். ஏனெனில் குதிரைகள் எஜமான் விஸ்வாசம் உடையவை. இவர்கள் எஜமான் துரோகம் செய்பவர்கள். அதற்கு தகுந்த பெயரை சொல்லுங்க


A viswanathan
மே 27, 2026 14:10

பெரிய யோக்கியமான கட்சி.125ஆண்டு கால சொந்த கட்சிக்கு இந்தியாவை பற்றி அரிசுவடு தெரியாத வரை தலைவர் ஆக்கியது.இவர்கள்குதிரை நேரத்தை பற்றி பேசுகிறார்கள்