Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,

எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,

சென்னை: கர்நாடகா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ., செய்தது போல், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக வெற்றிக் கழகம் அதிரடியாக களமிறங்கியுள்ளது .

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு ஆதரவளித்த அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களில் மூன்று பேர், நேற்று பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளனர். ஏற்கனவே, முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால், காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

அத்துடன் மேலும் பல தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை வர வைத்து, த.வெ.க., எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அக்கட்சி திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதி தான், மூன்று எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமா என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மத்தியில் நீண்ட காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை பலமுறை கவிழ்த்து இருக்கிறது. கட்சி தாவல் தடைச்சட்டம் அமலுக்கு வந்த பின், மூன்றில் இரு பங்கு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் தான் கட்சி மாற முடியும் என்ற நிலை வந்தது.

இதனால், எம்.எ ல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைக்கும் வழி தொடங்கியது. கடந்த 2019ல் கர்நாடகாவில், காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் ராஜினாமா செய்து விட்டு, பா.ஜ.,வில் இணைந்தனர். இதனால், காங்., ஆதரவில் முதல்வராக இருந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது.

இதுபோல, கடந்த 2020ல் ம.பி.,யில், 22 காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து பா.ஜ.,வில் இணைந்ததால், கமல்நாத் தலைமையிலான காங்., அரசு கவிழ்ந்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. இடைத்தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டது.

மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் செய்து வந்ததை, மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் த.வெ.க.,வும் தொடங்கி இருப்பது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

ஜூன் 19, 2026 08:39 am

படிப்பதற்கு மிகவும் சரியாகவே உள்ளது. ஆனால் சட்டப்படி இப்போது முடியாது. சட்ட திருத்தும் தேவை

Reply Rate this
ஜூன் 17, 2026 12:21 pm

ஒரு MLA / MP ராஜினாமா செய்தால், அவனுக்கு அடுத்தபடியாக அதிக வோட்டு வாங்கியவனுக்கு MLA / MP பதவி தரப்படணும். மற்றும் ராஜினாமா செய்தவனுக்கு அடுத்த 5 வருட தேர்தல் வரும்வரை போட்டி இட தடை விதிக்கணும். செய்வார்களா? சட்ட சீர்திருத்தம்.?

Reply Rate this