எத்தனை பெரிய ஜாதியும் என்னுடன் போட்டியிட முடியுமா?: கேட்கிறார் அமைச்சர் துரைமுருகன்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
காட்பாடி: ''நான் லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால், நெருப்பில் குதித்து விடுகிறேன்,'' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காட்பாடி பகுதியில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது: பொது வாழ்க்கையில் ஒழுக்கம் அவசியம். கடந்த 50 ஆண்டுகளில், நான் 1 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காட்டச் சொல்லுங்கள்; நான் இங்கேயே நெருப்பில் குதித்து விடுகிறேன். காட்பாடிக்கு நீதிமன்றம், தாலுகா அலுவலகம், சட்டக்கல்லுாரி, டி.எஸ்.பி., அலுவலகம், பல்கலை, மருத்துவமனை கொண்டு வந்துள்ளேன். தொகுதிக்கு எவ்வளவு செய்தும், என்னை சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கத்தரிக்காய் விற்றது உட்பட எல்லா வேலைகளையும் செய்த 'சாதாரண பள்ளி பையன் தான்' இந்த துரைமுருகன். சிலர் தன்னை பெரிய ஆள் என நினைக்கின்றனர். என்னை சாதாரணமாக எடை போடாதீர்கள்; டிகிரி முடித்து உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக இருந்துள்ளேன். என்னடா ஜாதி? எத்தனை பெரிய ஜாதியும் என்னுடன் போட்டி போட முடியுமா? நான் யார் என்பதை அவர்களுக்கு காட்ட தயாராக இருக்கிறேன். அதற்கு, நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இனிமேல் வருகிற தேர்தலில் நான் நிற்பேனா என்பது தெரியாது. இவ்வாறு அவர் கூறினார். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காட்பாடியில் உள்ள தன் இல்லத்தில் நேற்று துரைமுருகன் கருப்புக் கொடி ஏற்றினார். பின், அவர் அளித்த பேட்டியில், ''ஐந்து மாநில தேர்தல் நடைபெறும்போது, தொகுதி மறுவரையறை அவசியமா? பா.ஜ., வலையில் அ.தி.மு.க., மாட்டிக் கொண்டுள்ளதால், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ''நேற்று கட்சி துவங்கிய விஜய் கூட, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இன்னும் யார் பிடியிலும் அகப்படவில்லை போல; பாவம்,'' என கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am