எத்தனை பெரிய ஜாதியும் என்னுடன் போட்டியிட முடியுமா?: கேட்கிறார் அமைச்சர் துரைமுருகன்
காட்பாடி: ''நான் லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால், நெருப்பில் குதித்து விடுகிறேன்,'' என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். காட்பாடி பகுதியில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது:
பொது வாழ்க்கையில் ஒழுக்கம் அவசியம். கடந்த 50 ஆண்டுகளில், நான் 1 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காட்டச் சொல்லுங்கள்; நான் இங்கேயே நெருப்பில் குதித்து விடுகிறேன்.
காட்பாடிக்கு நீதிமன்றம், தாலுகா அலுவலகம், சட்டக்கல்லுாரி, டி.எஸ்.பி., அலுவலகம், பல்கலை, மருத்துவமனை கொண்டு வந்துள்ளேன். தொகுதிக்கு எவ்வளவு செய்தும், என்னை சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
கத்தரிக்காய் விற்றது உட்பட எல்லா வேலைகளையும் செய்த 'சாதாரண பள்ளி பையன் தான்' இந்த துரைமுருகன். சிலர் தன்னை பெரிய ஆள் என நினைக்கின்றனர்.
என்னை சாதாரணமாக எடை போடாதீர்கள்; டிகிரி முடித்து உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக இருந்துள்ளேன். என்னடா ஜாதி? எத்தனை பெரிய ஜாதியும் என்னுடன் போட்டி போட முடியுமா? நான் யார் என்பதை அவர்களுக்கு காட்ட தயாராக இருக்கிறேன்.
அதற்கு, நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இனிமேல் வருகிற தேர்தலில் நான் நிற்பேனா என்பது தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காட்பாடியில் உள்ள தன் இல்லத்தில் நேற்று துரைமுருகன் கருப்புக் கொடி ஏற்றினார்.
பின், அவர் அளித்த பேட்டியில், ''ஐந்து மாநில தேர்தல் நடைபெறும்போது, தொகுதி மறுவரையறை அவசியமா? பா.ஜ., வலையில் அ.தி.மு.க., மாட்டிக் கொண்டுள்ளதால், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
''நேற்று கட்சி துவங்கிய விஜய் கூட, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இன்னும் யார் பிடியிலும் அகப்படவில்லை போல; பாவம்,'' என கூறினார்.
Advertisement
அறிவார்ந்த தமிழர்கள் எப்படி இவரையெல்லாம் தேர்ந்தெடுக்கிறார்கள் ????
இனிவரும் தேர்தலில் நிச்சயமாக நிர்க மாட்டார் . இந்த தேர்தலிலும் அவுட் .
இவரது மகன் எம்பி தேர்தலில் பண விநியோகம் செய்த கேசு இன்னும் நடக்கிறது. நான் அவனில்லை பாணியில் நான் D துரைமுருகன் இல்லை. வெறும் துரைமுருகன் என்று குழப்பி தப்பிக்கப் பார்க்கும் கூத்து வி்ஞ்ஞான முறையின் உச்சம்.
தங்கள் இறை உணர்வுகளையும் கடவுள் நம்பிக்கைகளையும் சனாதன நம்பிக்கைகளையும் வெளிப்பட தெரிவிக்க முடியாமல் பதவிக்கும் பெருமைக்கும் காசுக்கும் அடிமைப்பட்டு தவிக்கிறார்கள் பாவம். ஒரு துளி விஷம் கூட அமுதத்தையே நஞ்சாக்கும் என்பதற்கு இவரைப்போன்றவர்கள் சான்று.
இதற்கு பொருள் என்ன என்றால் அது தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் இவர் அழித்து விட்டார் இல்லையெனில் எங்கோ மறைத்து விட்டார் என்பதுதான்.மத்திய அரசும்,நீதித்துறையும்,உளவுத்துறைகளும் தூங்கும் வரையில் இவர் போன்ற பல லஞ்ச அரசியல்வாதிகளை ஒன்றும் செய்ய முடியாது.நம் தலைவிதி.
கோமாவில் இருந்தாலும் உமக்கு சீட் உறுதி. சலுகைகள் அனுபவிக்க முடியும்.
உமது கடைசி தேர்தல் தோல்வியுடன் முடிவடையும் தீய சக்தி திருட்டு திராவிடத்துக்கு முடிவுரை எழுதப்படும்

இவருடைய தலைமைக்கே இவரை ஓரம்கட்டவேண்டும் என்று முடிவெடுத்து இவருக்கு சீட் கொடுக்கவேண்டாம் என்று இருந்ததாக செய்தி. இந்த ஒரு தடவைமட்டும் கொடுங்கள் அடுத்த முறை வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி சீட் வாங்கியுள்ளார். இந்த தடவை பெரிய சங்குதான். உளவுத்துறை ரிப்போர்ட் சரியாக சொல்லிவிட்டது இந்த முறை இவர் ஜெயிப்பது கஷ்ட்டம் என்று. பணத்தை அப்பனும் பிள்ளையும் வாரியிறைத்துக்கொண்டு இருக்கிறார்கள்..