இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்: சொல்கிறார் ஓபிஎஸ்
சின்னமனூர்: ''முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பத்தாண்டுகளாக எண்ணற்ற சோதனைகள் சூழ்ந்தன. பல இம்சைகளை சந்தித்தேன். தற்போது தான் மகிழ்ச்சியாக உள்ளேன்,'' என, தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார்.அவர் பேசியதாவது : டில்லியில் மத்தியமைச்சர் ஒருவரை சந்திக்க நேரம் கேட்டேன். அவர் வர கூறினார். யார் யாரை கூட்டி வருகிறீர்கள், கார் நம்பர் என்ன, எத்தனை பேர் வருகிறீர்கள் என கேட்டார்கள். நானும் தகவல் கூறினேன். டில்லியில் அவரது இல்லத்தில் 15 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டு திடீரென அவரது உதவியாளர் வந்து, அமைச்சர் உங்களை பார்க்க விரும்பவில்லை என்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am