Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


நீண்ட இழுபறிக்கு பின் திமுகவுடன் தொகுதி பங்கீடு கையெழுத்து; 5 தொகுதிகளை ஏற்றது மார்க்சிஸ்ட்

நீண்ட இழுபறிக்கு பின் திமுகவுடன் தொகுதி பங்கீடு கையெழுத்து; 5 தொகுதிகளை ஏற்றது மார்க்சிஸ்ட்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக அளித்த 5 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கையெழுத்திட்டனர்.
தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட இழுபறிக்கு பின், ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதேபோல், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஐந்து தொகுதிகள் வழங்க தி.மு.க., முடிவு செய்தது. அதை ஏற்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சி, சென்னையில் தேசிய பொதுச்செயலர் பேபி தலைமையில், மாநில நிர்வாகக் குழுவை கூட்டி ஆலோசித்தது.

அதில், கடந்த முறை போலவே, ஆறு தொகுதிகளுக்கு குறையாமல் பெற முடிவு செய்தனர். நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, 'சில சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு 'சீட்' ஒதுக்க வேண்டிய நிலை இருக்கிறது. கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இடம்பெற்றதால், தங்களுக்கு ஆறு தொகுதிகள் தர முடியவில்லை; ஐந்து தொகுதிகளை தருகிறோம். அதை ஏற்று கூட்டணிக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதனை மார்க்சிஸ்ட் ஏற்கவில்லை. தொடர்ந்து அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று இரவு சண்முகம் தலைமையில் மார்க்சிஸ்ட் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது 5 தொகுதிகளை ஏற்றுக் கொண்ட மார்க்சிஸ்ட், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது.

திருப்தியில்லை

நிருபர்கள் சந்திப்பில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது: “தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம், கூடுதல் தொகுதிகள் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தினோம். எங்களுக்கு ஐந்து தொகுதிகள் கொடுத்ததில் திருப்தியில்லை,'' என்றார்.

Advertisement