ஜெ.சி.எம்., மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் வேட்பு மனு தாக்கல்
பாகூர்: ஜெ.சி.எம். மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், பாகூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி,தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், ஜே.சி.எம்., மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், பாகூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். இதற்காக, நேற்று காலை 11:00 மணியளவில் தனது வீட்டில் இருந்து ஆதரவாளர்களுடன் சென்ற அவர், உப்பளம் மீன்வளத்துறை அலுவலகத்தில், பாகூர் தொகுதிக்கான தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவை சமர்ப்பித்தார். அவருக்கு, ஆதரித்து 10 பேர் முன்மொழிந்தனர். நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ., ரிச்சர்ட் ஜான்குமார் மற்றும் தொகுதி பிரமுகர்கள் உடனிருந்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am