/ செய்திகள் / ராகுல் இருக்குமிடமே உண்மையான காங்கிரஸ்; கண்டுப்பிடித்தார் மாணிக்கம் தாகூர்

ராகுல் இருக்குமிடமே உண்மையான காங்கிரஸ்; கண்டுப்பிடித்தார் மாணிக்கம் தாகூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

ராகுல் இருக்குமிடமே உண்மையான காங்கிரஸ் என அக்கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசினார். அவருடைய இந்த பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கடுமையான கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது:காங் எம்.பி., ராகுல் பார்லி., கூட்டம் முடிந்தவுடன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு கட்டாயம் வருவார். அவருடன் காங்., மூத்த தலைவர் சோனியா, எம்.பி., பிரியங்காவும் வருவர். முதல்வர் ஸ்டாலினும் ராகுலும் இணைந்து பிரசாரம் செய்வது குறித்து இரு கட்சிகளின் தலைமையும் முடிவு செய்யும்.புதுச்சேரியில் ராகுல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரையோ, ஸ்டாலின் பிரசாரத்தில் ராகுல் பெயரையோ குறிப்பிடவில்லை என பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கவலைப்படுகிறார். அவர் 'சீட்' கிடைக்காத விரக்தியில் பேசுகிறார். அவர் இபிஎஸ் முதல்வராக வரக்கூடாது என்பதற்காக பிரசாரம் செய்கிறார்.'பல கோடி ரூபாய் கொடுத்து காங்கிரசை தி.மு.க., பாக்கெட்டில் போட்டுக் கொண்டுள்ளது. உண்மை காங்., தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார். சோனியா, ராகுல், பிரியங்கா இருக்கும் இடம்தான் உண்மையான காங்கிரஸ்.இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !