Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ராகுல் இருக்குமிடமே உண்மையான காங்கிரஸ்; கண்டுப்பிடித்தார் மாணிக்கம் தாகூர்

ராகுல் இருக்குமிடமே உண்மையான காங்கிரஸ்; கண்டுப்பிடித்தார் மாணிக்கம் தாகூர்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்

ராகுல் இருக்குமிடமே உண்மையான காங்கிரஸ் என அக்கட்சி எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசினார். அவருடைய இந்த பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கடுமையான கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது:

காங் எம்.பி., ராகுல் பார்லி., கூட்டம் முடிந்தவுடன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு கட்டாயம் வருவார். அவருடன் காங்., மூத்த தலைவர் சோனியா, எம்.பி., பிரியங்காவும் வருவர். முதல்வர் ஸ்டாலினும் ராகுலும் இணைந்து பிரசாரம் செய்வது குறித்து இரு கட்சிகளின் தலைமையும் முடிவு செய்யும்.

புதுச்சேரியில் ராகுல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பெயரையோ, ஸ்டாலின் பிரசாரத்தில் ராகுல் பெயரையோ குறிப்பிடவில்லை என பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கவலைப்படுகிறார். அவர் 'சீட்' கிடைக்காத விரக்தியில் பேசுகிறார். அவர் இபிஎஸ் முதல்வராக வரக்கூடாது என்பதற்காக பிரசாரம் செய்கிறார்.

'பல கோடி ரூபாய் கொடுத்து காங்கிரசை தி.மு.க., பாக்கெட்டில் போட்டுக் கொண்டுள்ளது. உண்மை காங்., தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்' என த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார். சோனியா, ராகுல், பிரியங்கா இருக்கும் இடம்தான் உண்மையான காங்கிரஸ்.இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.

Advertisement

மே 06, 2026 01:04 pm

எந்த காலத்துலயும் உங்க ராகுல் இந்திய பிரதமராக வரவே மாட்டார். கடைசிவரை இப்படியே இருக்க வேண்டியதான்

Reply Rate this
ஏப் 15, 2026 12:55 pm

//ராஹுல் இருக்கும் இடம் தான் உண்மையான கான் கிராஸ் //.... திமுக கூட்டணிக்கு பிரசாரம் செய்ய ராகுல் இன்னும் வரவில்லை.... அப்போ விஜய் சொல்வது சரி தானே.... கான் கிராஸ் கட்சி திமுக வுடன் இல்லை என்று கூறுவது சரி தானே ?

Reply Rate this
ஏப் 15, 2026 11:42 am

சப்பை கட்டு படுகேவலமாக இருக்கு. ஆனால் பல கோடிகள் ஓருத்தர் கையிலிருந்து பல பேர் சட்டை பாக்கெட்டுக்கு மாறினது என்கிற குற்றச்சாட்டுக்கு பதிலே வரலியே.

Reply Rate this
ஏப் 15, 2026 10:50 am

அடி தடி யாக இருப்பார் என்று பார்த்தால் கடைசியில் எடுபிடி ஆக மாறி விட்டார்

Reply Rate this
ஏப் 15, 2026 09:14 am

அப்போ கான் கிராஸ் கட்சி தலைவர் கார்கே என்ற ஓரு எடுபிடி இருந்தாரே.... அது சும்மா பிம்பிளிக்கி பிளாப்பியா ?

Reply Rate this

இளவரசர் ராகுலும் எங்க தங்க தளபதியும் ஈரும் பேனும் போல நகமும் அழுக்கும் போல தலைமுடியும் சிக்கும் போல ராவணனும் கும்ப கர்ணன் போல எவராலும் பிரிக்க முடியாதவர்களாக்கும் .

Reply Rate this
ஏப் 15, 2026 07:47 am

ஏதோ இருக்கும் இடம் குட்டிச்சுவர் என்பார்களே - அது போலத்தான்...

Reply Rate this
ஏப் 15, 2026 07:25 am

உங்களோட கண்டுபிடிப்பு அபாரம் ....அந்த ஆளு வருஷத்துக்கு இருநூறு நாள் வெளிநாட்டுல தான் இருக்கறாப்புல ...அதனால தான் காங்கிரஸ் கட்சி இப்போது இந்தியாவிலேயே இல்லை ...

Reply Rate this

நெபொடிசம் down down

Reply Rate this
ஏப் 15, 2026 04:49 am

சரியான கண்டுபிடிப்பு

Reply Rate this