/ செய்திகள் / உட்கட்சி பிரச்னைகளால் வெற்றி பாதிக்கக்கூடாது: வி.சி.க.,வினருக்கு திருமா அறிவுரை

உட்கட்சி பிரச்னைகளால் வெற்றி பாதிக்கக்கூடாது: வி.சி.க.,வினருக்கு திருமா அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உட்கட்சி பிரச்னையால், தேர்தலில் வெற்றி பாதிக்கக்கூடாது என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:விசிகவில் போட்டியிடும் எட்டு தொகுதிகள் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும், தோழமை கட்சிகளின் வெற்றிக்காக ஓட்டு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட வேண்டும். திமுக, மாபெரும் வெற்றி பெற்றது என்ற வரலாறை, பதிவு செய்ய வேண்டும். நம் கட்சியின் உட்கட்சி பிரச்னைகளால், தோழமை கட்சிகளுக்கு, எவ்வித பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது. அவர்களின் வெற்றிக்கு, எந்த வகையிலும் இடையூறு ஏற்படக்கூடாது. எனவே, மிக கவனமாக, தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டும். ஓட்டுச்சாவடி வாரியாக, துணை குழுக்களை உருவாக்கி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். தனித்தனி குழுவாக செயல்படக் கூடாது; அது, தோழமை கட்சிகளின் வெற்றியை பாதிக்கக்கூடும். கட்சிக்கான தேர்தல் நிதியை, ஒரு சில மாவட்ட கட்சி நிர்வாகம் மட்டுமே செலுத்தி உள்ளனர். பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்னும் வழங்கவில்லை. அவர்களின் பொறுப்பு, மறுபரிசீலனை செய்யப்படும்.கட்சியில் பொறுப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும், தேர்தலுக்கு பின், பொறுப்பு வழங்கப்படும். மத்திய அரசை கண்டித்து, இன்று தங்கள் வீடுகளிலும், எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கோ, அங்கெல்லாம் கருப்பு கொடி ஏற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !