/ செய்திகள் / ஸ்டாலின் தோல்வி; எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி?
ஸ்டாலின் தோல்வி; எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியை தழுவி உள்ளது. த.வெ.க.,வுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக தி.மு.க., உள்ளது. அக்கட்சித் தலைவரான முதல்வர் ஸ்டாலின், தேர்தலில் தோல்வி அடைந்ததால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தி.மு.க.,வில் யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே துணை முதல்வராக இருந்த உதயநிதிக்கு, அப்பொறுப்பு வழங்கப்படுமா அல்லது மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் நேருவுக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை ஸ்டாலின் முடிவு செய்வார் என, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am