/ செய்திகள் /  பா.ம.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தர்மபுரியில் அன்புமணி மனைவி போட்டி

 பா.ம.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தர்மபுரியில் அன்புமணி மனைவி போட்டி

சென்னை: பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி தலைவர் அன்புமணி நேற்று அறிவித்தார். அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் கீழ்வேளூர், செஞ்சி, அம்பத்துார் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, கடந்த 25ம் தேதி, அன்புமணி அறிவித்தார். இதையடுத்து, மீதமுள்ள, 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அன்புமணி நேற்று அறிவித்தார். தர்மபுரி தொகுதியில், அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக, பா.ம.க., மருத்துவர் அணி செயலர் அன்பு சோழன்; சென்னை பெரம்பூர் தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜயை எதிர்த்து, பா.ம.க., பொருளாளர் திலகபாமா; விருத்தாசலத்தில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை எதிர்த்து பா.ம.க., மகளிரணி செயலர் தமிழரசி ஆகியோர் போட்டியிடு கின்றனர்.

பா.ம.க., வேட்பாளர்கள் விபரம்:

தொகுதி - வேட்பாளர் பெரம்பூர் - திலகபாமாதர்மபுரி - சவுமியாவிருத்தாசலம் - தமிழரசி ஆதிமூலம்சேலம் மேற்கு - கார்த்திபென்னாகரம் - - பாடி செல்வம்போளூர் - சி.ஆர்.பாஸ்கரன்திருப்போரூர் - கே.பாலுஜெயங்கொண்டம் - க.வைத்திசேலம் வடக்கு - சதாசிவம்விக்கிரவாண்டி - சிவகுமார்சோளிங்கர் - சரவணன்மயிலாடுதுறை - சித்தமல்லி பழனிசாமிஉத்தரமேரூர் - மகேஷ்குமார்ரிஷிவந்தியம் - செழியன்காட்டுமன்னார் கோவில் (தனி) - அன்பு சோழன்

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !