Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பா.ம.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தர்மபுரியில் அன்புமணி மனைவி போட்டி

 பா.ம.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தர்மபுரியில் அன்புமணி மனைவி போட்டி

சென்னை: பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி தலைவர் அன்புமணி நேற்று அறிவித்தார்.

அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் கீழ்வேளூர், செஞ்சி, அம்பத்துார் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, கடந்த 25ம் தேதி, அன்புமணி அறிவித்தார்.

இதையடுத்து, மீதமுள்ள, 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அன்புமணி நேற்று அறிவித்தார். தர்மபுரி தொகுதியில், அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிடுகிறார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக, பா.ம.க., மருத்துவர் அணி செயலர் அன்பு சோழன்; சென்னை பெரம்பூர் தொகுதியில், த.வெ.க., தலைவர் விஜயை எதிர்த்து, பா.ம.க., பொருளாளர் திலகபாமா; விருத்தாசலத்தில் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவை எதிர்த்து பா.ம.க., மகளிரணி செயலர் தமிழரசி ஆகியோர் போட்டியிடு கின்றனர்.

பா.ம.க., வேட்பாளர்கள் விபரம்:



தொகுதி - வேட்பாளர்

பெரம்பூர் - திலகபாமா
தர்மபுரி - சவுமியா
விருத்தாசலம் - தமிழரசி ஆதிமூலம்
சேலம் மேற்கு - கார்த்தி
பென்னாகரம் - - பாடி செல்வம்
போளூர் - சி.ஆர்.பாஸ்கரன்
திருப்போரூர் - கே.பாலு
ஜெயங்கொண்டம் - க.வைத்தி
சேலம் வடக்கு - சதாசிவம்
விக்கிரவாண்டி - சிவகுமார்
சோளிங்கர் - சரவணன்
மயிலாடுதுறை - சித்தமல்லி பழனிசாமி
உத்தரமேரூர் - மகேஷ்குமார்
ரிஷிவந்தியம் - செழியன்
காட்டுமன்னார் கோவில் (தனி) - அன்பு சோழன்

Advertisement