/ செய்திகள் /  வைரத்திற்கு மாறிய பிரேமலதா

 வைரத்திற்கு மாறிய பிரேமலதா

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். முக்கிய செயல்களுக்கு ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்பார். தி.மு.க., கூட்டணியையும், அப்படித்தான் அவர் முடிவு செய்தார். ஆனால், அவரது பேச்சே, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உஷாரான அவர் ஏதோ பிரச்னை இருப்பதாக கருதி, ஜோதிடர் ஆலோசனையை மீண்டும் நாடினார். சோழியை உருட்டி பிரச்னம் பார்த்த கேரள ஜோதிடர், பிரேமலதா தங்கத்திற்கு பதிலாக, வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் அணியலாம் எனக் கூறி உள்ளார். அவரது ராசிப்படி, அவற்றை அணிந்தால் மட்டுமே வெற்றி கைகூடும்; நினைத்தது நடக்கும்; பதவிகள் தேடி வரும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, வைரம் மற்றும் பிளாட்டின நகைகளை அணிந்து, பிரேமலதா பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளார். சமீபத்தில், விருத்தாசலம் தொகுதியில் பிரசாரம் செய்த தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழியும், பிரேமலதாவின் நகை, ஆடை அலங்காரம் சிறப்பாக இருப்பதாக வாழ்த்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Venkatesan Ramasamay
ஏப் 21, 2026 11:05

பிரேமலதாவும் ... வைகோவும் ஆமை மாதிரி.. எந்த கூட்டணில சேர்ந்தாலும் ...அந்த கட்சிக்கு சங்குதான் ..


duruvasar
ஏப் 20, 2026 17:18

அலுமினிய டம்பளரில் ஆரஞ்சு சூஸ் குடித்தால் அமோக வெற்றி கிடைக்குமாம் ஜோய்ஸியர் சொல்லறாங்களாம் . செய்ஞ்சுதான் பாருங்களேன்


sankar
ஏப் 20, 2026 16:58

ஏதாவது சொல்லிறப்போறேன்


ராமகிருஷ்ணன் பரமக்குடி
ஏப் 20, 2026 11:24

பெட்டி பிரேமலதாவும், கனிமொழியும் இரட்டை நாயனம் போல கழகத்திற்கு சங்கு ஊதுவார்கள். சுருட்டிய பணத்தை எப்படி பதுக்குவது என்று முன் அனுபவம் உள்ளவர் பயிற்சி தருகிறார்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 20, 2026 11:20

அடுத்தமாசம் சமூக நலத்துறை மந்திரியா பதவி ஏற்கும்போது வைரத்துலதான் செருப்பு போடணும்னு பணிக்கர் சொல்லிட்டாராமே


Matt P
ஏப் 20, 2026 10:38

கனிமொழிக்கு உயரம் பத்தாது ப்ரேமாவின் பக்கத்தில் நிற்பதற்கு.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 20, 2026 09:48

சூப்பர் பகுத்தறிவு வாழ்க பெரியார்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஏப் 20, 2026 09:25

மக்களே உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். சுயநலவாதிகளையும் தனது கட்சியை பேரம் பேசும் பேரவாதிகளையும் தமிழக அரசியலிலிருந்து அப்புறப்படுத்துங்கள். திருட்டு கலகங்களுடன் சேர்ந்து அவர்களும் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 20, 2026 08:59

கட்சி பெயரில் முற்போக்கு திராவிட கழகம். ஆனால் செயல்கள் அனைத்தும் மூடப்படும் நம்பிக்கை.


Govi
ஏப் 20, 2026 08:51

ஒரு இடம் கூட தோரது