'ஜென்ஸி கிட்ஸ்'களை கவர 'வாட்ஸாப்' ஸ்டிக்கர்
இந்த தேர்தலில், ஒவ்வொரு வேட்பாளரும் ஏ.ஐ., மூலம் தங்களுக்கான தனிப்பட்ட வீடியோக்கள், தனிப்பாடல்களை உருவாக்கி சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகின்றனர். வீதிதோறும் ஒலிபெருக்கி வழியே ஒலிபரப்பி வருகின்றனர். அரசியல் கட்சிகள், மொபைல் போன்களில், ஓட்டு கேட்கும் ஆடியோக்களை அனுப்புகின்றனர்.
அந்த வகையில், 'ஜென்ஸி கிட்ஸ்'களை கவர, 'வாட்ஸாப் ஸ்டிக்கர்களை' தி.மு.க., அதிக அளவில் வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், காலை உணவுத் திட்டம், மகளிருக்கு இலவச பஸ் பயணம் போன்ற முக்கிய திட்டங்கள், ஸ்டிக்கர் வடிவில் வெளியிடப்பட்டுள்ளன.
திட்டத்தின் பெயர், கட்சி சின்னம், கருணாநிதி அல்லது முதல்வர் படத்துடன், ஓட்டு கேட்டு ஸ்டிக்கர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 'வாட்ஸாப் ஸ்டிக்கர்களை' வெறும் படங்களாக பரப்பாமல், கட்சியின் கருத்துக்களை மிக எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரசார ஆயுதமாக, இந்த தேர்தலில் தி.மு.க., பயன்படுத்தி வருகிறது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்