புதிய தமிழகம் கட்சியின் 27 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
கோவை: புதிய தமிழகம் கட்சியின் 27 பெயர்கள் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதன் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் தனித்து போட்டியிடுகிறது.அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் சில குறிப்பிட்ட தொகுதிகளை மட்டும் தெரிவு செய்து அதில் களம் காண்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் 43 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அண்மையில் வெளியிட்டார். தற்போது எஞ்சிய 27 வேட்பாளர்கள் அடங்கிய 2ம் கட்ட வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அவர் இன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு; ராஜபாளையம் - வழக்கறிஞர் மு.ரமாதேவிசிவகாசி - ௧. காளீஸ்வரிஅருப்புக்கோட்டை - கி.ரகுபதிதிருச்சுழி - கு. குணசேகரன்தூத்துக்குடி - ரா.ரமேஷ்முதுகுளத்தூர் - ச. மலைச் செல்வம் திருவாடனை - சிவ. பாலுச்சாமிதிருவையாறு - வ. வேணுதாராபுரம் - மா. சின்னசாமிதிண்டுக்கல் - மா. பிரதீப் பாண்டியன்ஆலங்குளம் - அ. உதயக்குமார்பெரம்பலூர் - த. வெங்கடேசன்அந்தியூர் - தா. பெரியசாமிபல்லாவரம் - அ.தங்கராஜ்ஆலந்தூர் - வேலுச்சாமிபழனி - கு. வாய்க்கால் துரைலால்குடி - வழக்கறிஞர் ப.இளஞ்செழியன்மணச்சநல்லூர் - மு.பாலுஸ்ரீரங்கம் - வழக்கறிஞர் ஆ.நியூட்டன்திருச்சி மேற்கு - கோ. சண்முகம்துறையூர் - த.இராஜமாணிக்கம்கே.வி.குப்பம் - கு. கந்தன்மடத்துக்குளம் - க. செந்தில்குமார்அணைக்கட்டு - பொ. ஜெயசீலன்திருப்பரங்குன்றம் - சேதுராமன்நத்தம் - ஸ்ரீ. விஜயக்குமார்திருச்சி கிழக்கு - அ. கௌசல்யாபின்னர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி;வரும் 6ம் தேதி அனைத்து வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய உள்ளோம். கணிசமாக தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றி இப்போது சொல்ல முடியாது.தமிழகத்தில் வித்தியாசமான முறையில் களமாடுவோம். 3வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வரும். கூடுதலாக 10 தொகுதிகள் வரை போட்டியிடுவோம். வரும் 2ம் தேதி மூன்றாவது கட்ட பட்டியல் வெளியிடுவோம்.இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am