புதிய தமிழகம் கட்சியின் 27 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
கோவை: புதிய தமிழகம் கட்சியின் 27 பெயர்கள் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதன் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் தனித்து போட்டியிடுகிறது.அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் சில குறிப்பிட்ட தொகுதிகளை மட்டும் தெரிவு செய்து அதில் களம் காண்கிறது.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் 43 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அண்மையில் வெளியிட்டார். தற்போது எஞ்சிய 27 வேட்பாளர்கள் அடங்கிய 2ம் கட்ட வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அவர் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு;
ராஜபாளையம் - வழக்கறிஞர் மு.ரமாதேவி
சிவகாசி - ௧. காளீஸ்வரி
அருப்புக்கோட்டை - கி.ரகுபதி
திருச்சுழி - கு. குணசேகரன்
தூத்துக்குடி - ரா.ரமேஷ்
முதுகுளத்தூர் - ச. மலைச் செல்வம்
திருவாடனை - சிவ. பாலுச்சாமி
திருவையாறு - வ. வேணு
தாராபுரம் - மா. சின்னசாமி
திண்டுக்கல் - மா. பிரதீப் பாண்டியன்
ஆலங்குளம் - அ. உதயக்குமார்
பெரம்பலூர் - த. வெங்கடேசன்
அந்தியூர் - தா. பெரியசாமி
பல்லாவரம் - அ.தங்கராஜ்
ஆலந்தூர் - வேலுச்சாமி
பழனி - கு. வாய்க்கால் துரை
லால்குடி - வழக்கறிஞர் ப.இளஞ்செழியன்
மணச்சநல்லூர் - மு.பாலு
ஸ்ரீரங்கம் - வழக்கறிஞர் ஆ.நியூட்டன்
திருச்சி மேற்கு - கோ. சண்முகம்
துறையூர் - த.இராஜமாணிக்கம்
கே.வி.குப்பம் - கு. கந்தன்
மடத்துக்குளம் - க. செந்தில்குமார்
அணைக்கட்டு - பொ. ஜெயசீலன்
திருப்பரங்குன்றம் - சேதுராமன்
நத்தம் - ஸ்ரீ. விஜயக்குமார்
திருச்சி கிழக்கு - அ. கௌசல்யா
பின்னர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி;
வரும் 6ம் தேதி அனைத்து வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்ய உள்ளோம். கணிசமாக தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் பற்றி இப்போது சொல்ல முடியாது.
தமிழகத்தில் வித்தியாசமான முறையில் களமாடுவோம். 3வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வரும். கூடுதலாக 10 தொகுதிகள் வரை போட்டியிடுவோம். வரும் 2ம் தேதி மூன்றாவது கட்ட பட்டியல் வெளியிடுவோம்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்