ரூ.8,000 கூப்பனால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்
'தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள 8,000 ரூபாய் கூப்பன் வாயிலாக உள்ளூர் பொருளாதாரம் உயர்ந்து, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்' என்கிறார் அமைச்சர் கீதா ஜீவன். துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், இல்லத்தரசி திட்டத்தின் கீழ், 8,000 ரூபாய்க்கான கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பொருள் பழுதானாலும் அதை சரிசெய்ய முடியாத நிலையில் எத்தனையோ வீடுகள் உள்ளன. அவர்களுக்கு இந்த கூப்பன் வாயிலாக சுதந்திரம் கிடைத்துள்ளது. உள்ளூர் பொருளாதாரம் உயர்ந்து தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்களும், பொருளாதார வல்லுனர்களும் பாராட்டி உள்ளனர். மகளிர் உரிமைத் தொகையில் இன்னும் ஒருசில தகுதியுள்ள பெண்கள் விடுபட்டுள்ளனர். மறுஆய்வு செய்து அவர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 4 )
யாருடய தொழில் வளர்ச்சி - கள்ளக்குறிச்சி மாதிரியா
8000ரூ கூப்பன் பிரிஜ் எல்லாம் வாங்க நிச்சயம் போதாது, அதிமுக போலவே இலவசமாக பிரிஜ் தருகிறேன் என்று எதையாவது இலவசமாக தருகிறேன் என்று சொல்லியிருக்கலாம்...
கிரிப்டோ அது எப்படி? தொழில் வளர்ச்சிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ? இது மிஷனரி வர டொனேஷன் மாதிரியா?
8000 கூப்பனால் தமிழ்நாடு காஜானா காலியாகும்.இதுதான் உண்மை.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am