Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'ரூ.8,000 கூப்பனால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்'

 'ரூ.8,000 கூப்பனால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்'

'தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள 8,000 ரூபாய் கூப்பன் வாயிலாக உள்ளூர் பொருளாதாரம் உயர்ந்து, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்' என்கிறார் அமைச்சர் கீதா ஜீவன்.

துாத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:

தி.மு.க., தேர்தல் அறிக்கை யில், இல்லத்தரசி திட்டத்தின் கீழ், 8,000 ரூபாய்க்கான கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பொருள் பழுதானாலும் அதை சரிசெய்ய முடியாத நிலையில் எத்தனையோ வீடுகள் உள்ளன. அவர்களுக்கு இந்த கூப்பன் வாயிலாக சுதந்திரம் கிடைத்துள்ளது.

உள்ளூர் பொருளாதாரம் உயர்ந்து தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என அரசியல் நோக்கர்களும், பொருளாதார வல்லுனர்களும் பாராட்டி உள்ளனர். மகளிர் உரிமைத் தொகையில் இன்னும் ஒருசில தகுதியுள்ள பெண்கள் விடுபட்டுள்ளனர். மறுஆய்வு செய்து அவர்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement