/ செய்திகள் / டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்: கலெக்டர்கள், கமிஷனர்களும் மாற்றம்

டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றார்: கலெக்டர்கள், கமிஷனர்களும் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் இன்று இரவு பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் உள்ளார். இந்நிலையில், அவரை மாற்றி புதிய டிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. இவர் இன்று இரவு சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

யார் இவர்

சந்தீப் ராய் ரத்தோர் டில்லியில் பிறந்தவர். 1992ம் ஆண்டு தமிழக கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திண்டுக்கல் எஸ்பி, தூத்துக்குடி எஸ்பி ஆக பணியாற்றி உள்ளார்.1992ம் ஆண்டு கோவை துணை கமிஷனராக பணியாற்றினார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பல்வேறு முக்கிய குற்றவாளிகளை கைது செய்தார். சென்னையில் போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த போது, 2000 ம் ஆண்டு சிக்னல்களில் எல்இடி விளக்குகளை பராமரிக்கும் விதிகள் கொண்டு வரப்பட்டன.2003 ம் ஆண்டு சிபிசிஐடி எஸ்பி ஆக பதவி வகித்த போது தமிழகத்தை அதிரவைத்த முத்திரைத்தாள் மோசடி வழக்கை கையாண்டதில் முக்கியமான அதிகாரி ஆவார்.மத்திய தொழிலக பாதுகாப்புப் படை டிஜஜியாக 2010 ல் பதவி உயர்வு பெற்றார். 2016ம் ஆண்டு கடலோர பாதுகாப்பு குழு ஐஜி ஆக இருந்தார். 2019 ம் ஆண்டு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணய தலைவராக இருந்தார். இதன்பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் ஆகவும் இருந்தார். கடந்தாண்டு ஜூலை மாதம் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்பட்டார்.ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி உள்ளார்.

கமிஷனர்கள் இடமாற்றம்

மேற்கு மண்டல ஐஜி ஆக ரம்யா பாரதி நியமனம்தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதில் புதிய கமிஷனர் ஆக சஞ்சய் குமார் பதவியேற்க உள்ளார்.மதுரை போலீஸ் கமிஷனர் ஆக இருக்கும் லோகநாதன் மாற்றப்பட்டு உள்ளார். அபிஷேக் தீக்சித் புது கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலெக்டர்கள் மாற்றம்

தூத்துக்குடி கலெக்டர் இளம் பகவத் மாற்றப்பட்டார். விசு மகாஜன், புது கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.சேலம் கலெக்டராக இருந்த பிருந்தா தேவி இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர்கள் நாளை ஏப்ரல் 3ம் தேதி காலை பதவியேற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !