/ செய்திகள் /  சசிகலா கட்சி வேட்பாளர் தி.மு.க.,வில் ஐக்கியம்

 சசிகலா கட்சி வேட்பாளர் தி.மு.க.,வில் ஐக்கியம்

சசிகலா வின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், உளுந்துார்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், தி.மு.க.,வில் இணைந்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்த குமா ர், அ.தி.மு.க.,வில் ஒன்றிய செயலராக இருந்தார். பின், சசிகலா அணிக்கு சென்று, ஒன்றிய செயலராக இருந்து வந்தார். சசிகலா இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில், உளுந்துார்பேட்டை தொகுதி வேட்பாளராக குமார் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தென்னந்தோப்பு சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரத்தை துவக்கினார். ஆனால், திடீரென நேற்று முன்தினம் இரவு, அமைச்சர் வேலு முன்னிலையில் தி.மு.க.,வில் குமார் இணைந்தார். தி.மு.க., சார்பில் போட்டியிடும் வசந்தவேலுவுக்கு ஆதரவளிப்பதாகவும் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !