/ செய்திகள் / துறைமுகம் தொகுதியில் ஸ்டாலின் போட்டி?

துறைமுகம் தொகுதியில் ஸ்டாலின் போட்டி?

- நமது நிருபர் - ' திருச்சி கிழக்கு அல்லது துறைமுகம் தொகுதியில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும்' என, அக்கட்சியினர் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வி அடைந்தார். அத்தொகுதி மக்களுக்கு நன்றி கூற அவர் சென்றபோது, முன்னாள் அமைச்சரும், துறை முகம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான சேகர்பாபு உடன் சென்றார். அப்போது, கட்சியினர் சிலர், ஸ்டாலின் தோல்விக்கு வருந்தி கண்ணீர் விட்டனர்; அக்காட்சியை கண்டு சேகர்பாபுவும் அழுதார். இந்நிலையில், துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, அத்தொகுதியில் ஸ்டாலினை போட்டியிட வைத்து வெற்றி பெற வைப்பதாக, ஸ்டாலின் குடும்பத்தினரிடம் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அதனால், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் மகேஷ் போட்டியிடுவார் என்ற தகவல் கட்சியில் பரவியது. ஆனால், அந் த தொகுதியில் மகேஷ் போட்டி யிட்டால் தோல்வி அடைவார் என, அத்தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். இதனால், திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், விஜய் வெற்றி பெற்ற தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சென்னை துறைமுகம் தொகுதியானது, ஏற்கனவே முன்னாள் முதல்வர் கருணாநிதி போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், அங்கு ஸ்டாலின் களமிறங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

அருண் பிரகாஷ் மதுரை
மே 16, 2026 21:32

இருக்குற தொகுதியில் இன்னொன்றை இழக்க வேண்டாம்.. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எந்த தொகுதியும் திமுகவிற்கு சாதகம் இல்லை.. கூட்டணி பலமும் இல்லை.. அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது..


பிரேம்ஜி
மே 16, 2026 21:10

துறைமுக தொகுதி வாக்காளர்கள் வீட்டில் பணமழை பெய்யும்! வாழ்க வளமுடன்!


BHARATH
மே 16, 2026 19:26

அவனுங்க GPAY பண்ணி இருக்கானுங்க


சந்திரன்
மே 16, 2026 18:02

நான் பாட்டுக்கு சும்மாதானடா தோத்தத நினைச்சி புலம்பிகிட்டிருந்தேன் தெளியறதுக்கு முன்னாடி நிக்க வச்சி குத்துனா பாடி பேஸ்மட்டம் எல்லாம் வீக் அசிங்கப்படுத்தனும்னே முடிவு பண்ணிட்டீங்களாடா


என்றும் இந்தியன்
மே 16, 2026 17:38

இந்த முறையும் 2500 வோட்டு வித்தியாசத்தில் தோற்றால் என்ன செய்யபோகின்றீர்.


விஸ்வ நாதன்
மே 16, 2026 17:21

ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு இப்ப தேவை பெட் ரஸ்ட்


திராவிட மாடல்
மே 16, 2026 16:15

இந்த முறை ஸ்டாலினுக்கு டெபாசிட் போகும்


Suppan
மே 16, 2026 16:12

ஸ்டாலின் சாமி உங்களுக்கு ஆயுள் முழுவதும் முழு ஒய்வு தேவை. தமிழகத்தைக்கெடுத்தது போதும் சாமி.


sankar
மே 16, 2026 12:42

அதிமுக போட்டியில் இருந்து விலகி, டிவிக உடன் நேரடி போட்டி என்றால் - மிகவும் கஷ்டம்தான்


murugan
மே 16, 2026 12:10

மிகவும் சரியான பதிவு. நன்றிகள்.