/ செய்திகள் / ஜனநாயகன் படத்தை தடுக்க கூட்டு சூழ்ச்சி: விஜய் குற்றச்சாட்டு

ஜனநாயகன் படத்தை தடுக்க கூட்டு சூழ்ச்சி: விஜய் குற்றச்சாட்டு

திருச்சி: நீட் தேர்வு ரத்து, ரேசன் கடையில் உளுந்தம் பருப்பு கொடுப்பேன் என்று சொன்னீர்களே என்னாச்சு?அடுத்த பொய் வாக்குறுதிகளை தயாரித்துவிட்டார் ஸ்டாலின் என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட, தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் விஜய் பேசியதாவது: திருச்சி பகுதி மக்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள். காலையில் எல்லோரும் சாப்பிட்டீர்களா? காஸ் பிரச்னைகள் எல்லாம் எப்படி இருக்கிறது. எல்லாம் சரி ஆகிவிட்டதா? காஸ் சிலிண்டர் புக் செய்தால் ஆகிறதா? இந்த காஸ் பிரச்னையால் எவ்வளவு டீக்கடைகள், ஹோட்டல்கள் மூடிவிட்டார்கள். இதனால் எவ்வளவு கஷ்டங்கள், நஷ்டங்கள். காஸ் சிலிண்டர்கள் பிரச்னைக்கு இவர்கள் இரண்டு பேரும் தான் காரணம்.

டில்லிக்கு….

ஸ்டாலின் சார் இந்த பிரச்னைக்கும், நமக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்வார். ஆனால் அவர் வீட்டில் ஏதாவது பிரச்னை, ரெய்டு என்றால் டில்லிக்கு பறந்து போய் விட்டு வருவார். இந்த காஸ் சிலிண்டர் பிரச்னைக்கு கொஞ்சம் டில்லிக்கு பறந்து போய்விட்டு வரலாமலா? கொஞ்சம் பிரயோசனமாக இருக்கும். காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவேன் சொன்ன வாக்குறுதிகள் என்னாச்சு? நீட் தேர்வு ரத்து, ரேசன் கடையில் உளுந்தம் பருப்பு கொடுப்பேன் என்று சொன்னீர்களே என்னாச்சு? அடுத்த பொய் வாக்குறுதிகளை தயாரித்துவிட்டார் ஸ்டாலின். ஸ்டாலினைப் போல் நாங்கள் பொய் வாக்குறுதிகளை தர மாட்டோம். 6 சிலிண்டர் கட்டணம் இல்லாமல் தருவோம். கல்யாணம் ஆகிப்போற தங்கைகளுக்கு ஒரு பவுன் தங்கம், பட்டுச்சேலை தருவோம். தவெக சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் காடு பக்கம் ஒதுங்கிய பெண் இந்த உலகத்தை விட்டே போய்விட்டாங்க. மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத இந்த தீய சக்தி திமுக அரசை என்ன பண்ணலாம், தூக்கி எறிவோமா? திருச்சியில் ஒரு மந்திரி இருக்கிறார்.

நியாயமான ஆட்சி

கோடிக்கணக்கான பணத்தை லஞ்சமாக வாங்கிட்டு தகுதியானவர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து விட்டார். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை? இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்த ஸ்டாலின் சர்காரை தூக்கி வீசி எறிவோமா? நகராட்சி துறையில் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்றால், மற்ற துறை கணக்கெல்லாம் போட்டுப் பாருங்க, தலையெல்லாம் சுற்றி விடும். 2,000 கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு வேலை என கூறி 5 பேருக்கு மட்டும் வேலை கொடுத்தனர்; நாங்கள் 100% நியாயமான ஆட்சியை தருவோம்; 100 சதவீதம் என்னை நம்பலாம்.

கரூர் நிகழ்ச்சி

எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள். இந்த தேர்தலில் திமுக ஏலத்தில் எடுத்துள்ள கல்லாப்பெட்டி கூட்டணியுடன் சேர்ந்து, மற்றும் பலர் கூட்டணியுடன் கள்ள கூட்டணி போட்டுக்கொண்டு என்னை எப்படி என்னை எதிர்க்கிறார்கள் என்று உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கரூர் நிகழ்ச்சி சூழ்ச்சி என்று பலர் சொல்வது மாதிரி, நம்ம கடைசி படம் ஜனநாயகனுக்கு எதிராகவும் நடக்கிறது.

கூட்டு சூழ்ச்சி

என் மனசுக்கு நெருக்கமான உங்க எல்லோருடனும் எனக்கு இருக்கும் பூர்வ ஜென்ம பந்தத்தை இன்னமும் எங்கோ இறுக்கமாக மாற்றிடுமோ என்று சூழ்ச்சி செய்கின்றனர். எங்கே ஜனநாயகன் படம் இந்த தேர்தலில் நமக்கு மிகப்பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என்று அதைத்தடுக்க ஒரு கூட்டு சூழ்ச்சி நடக்கிறது. அதோட இன்னும் பலப்பட சூழ்ச்சிகள். உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்துத்தான் நீதி வேண்டும். திமுகவையும், பாஜவையும் நம்பாதீர்கள், இந்த இரண்டு பேரும் ஒரே கூட்டணி தான். இவ்வாறு விஜய் பேசினார்.

பாட்டு பாடி...

திருச்சி பிரசாரத்தில், விசிலுக்கு அடி ஓட்டு , கடைசி நம்பிக்கை மக்களை தேடி வருது, அதை இறுக்கி பிடிச்சு வரலாறு எழுது என விஜய் பாட்டு பாடி ஓட்டு சேகரித்தார்.

போலீஸ் கால் முறிவு

விஜய் பிரசாரத்தின் போது, தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவன் கார் ஏறியதில் பாதுகாப்புப் பணியில் இருந்த சதீஷ் என்ற போலீஸ் ஒருவரில் கால் மீது ஏறியது. அப்போது அந்த போலீஸ்காரர், தடுப்புகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். விபத்தை தொடர்ந்து, தவெகவினர், அந்த போலீஸ்காரரை தூக்கிச் சென்று ஆம்புலன்சில் ஏற்றிவிட்டனர்.இச்சம்பவம் நடந்த போது ஆதவ் அர்ஜூனா , விஜய் காரில் இருந்ததாக தெரிகிறது.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

sankaranarayanan
ஏப் 02, 2026 21:46

விஜய் தமிழ் நாட்டில் தேர்தல் பிரசாரத்திற்கு எங்கு சென்றாலும் திமுக - தான் ஸ்டாலின்தான் அவர்களுக்கும் மக்களுக்கும் எதிரியென்று சொல்ல வேண்டும் பாஜவை இவர் வீம்புக்கு எங்கேயும் இழுக்காமல் இருந்தால் நல்லது இன்னும் அதிமாகவே வாக்குகளை சேகரிப்பார் பாஜ இவருக்கு சாதகமாகவே யுள்ளது


M.Selvam
ஏப் 02, 2026 21:35

சாமியே எங்களை இது போன்ற ஆட்கள் இடம் இருந்து தேர்தல் முடியும் வரை காப்பாத்து …என்னவெல்லாம் உளர போரானோ தெரியல சாமி ..


T.sthivinayagam
ஏப் 02, 2026 19:52

வேட்புமனு தாக்கல் செய்ய திருச்சி பெரம்பூருக்கு சரியான நேரத்தில் ஒரு நிமிடம் கூட தாமதம் இல்லாமல் வரும் விஜய்,பிரச்சாரத்துக்கு மட்டும் தாமதமாக வருவது யதார்த்தமா அல்லது திட்டமா அப்பாவி மக்கள் ஊர் பலிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள்.


Balamurugan Pandurangan
ஏப் 02, 2026 19:33

PNG also not produced in India. I checked with PNG vendor said only 20% produced in India.


கனோஜ் ஆங்ரே
ஏப் 02, 2026 19:15

75 வருஷம், 50 வருஷம் பழந்தின்னு கொட்ட போட்ட கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு காலை முதல் இரவு வரை 10 , 12 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரத்திற்கு போய் மக்களை நேரடியாக சந்தித்து... காட்டு கத்தல் கத்தாம.. தன் சாதனைகளையும், எதிர்க்கட்சிகளை வேதனைகளையும் மக்களிடம் விளக்கி... எங்களுக்கு வாக்களியுங்கள்...னு மக்களிடம் கோரிக்கை வச்சி... மிகப் பெரிய கூட்டங்களை எவ்வித அசம்பாவிதங்கள் நடக்காம நடத்தி பிரச்சாரம் செய்யுறாங்க.. தினமும். ஏன்னா, இருக்றது 20 நாட்கள்தான்.. அதுனால பேயா அலைஞ்சி திரியுறாங்க... இவர் என்னடான்னா... பெரம்பூர்லிருந்து 3 தொகுதி பார்க்க போறேன்னு போயிட்டு.... பெரம்பூர் மற்றும் அதன் பக்கத்து தெருவான கொளத்தூருக்கு போயிட்டு... ஸ்ஸ்...அப்பா, என்னா வெயில்...னு பாதுகாப்பில்லை..ன்னு பனையூர் பங்களாவுல போய் பதுங்கிட்டார்... ரெண்டு நாள் கழிச்சு இப்ப திருச்சி வந்து பிரச்சாரம் பண்ணிட்டார்... இன்னைக்கு பனையூர்ல போய் பதுங்குனான்னா... வெளிய வர்றதுக்கு குறைந்த பட்சம் 3, 4 நாளாவது ஆகும்... இப்படி 3, 4 நாளைக்கு ஒரு தொகுதியில் மக்களை சந்தித்து பிரச்சாரம் பண்ணா... இவன் எப்ப 234 தொகுதியில் பிரச்சார சுற்றுப்பயணம் பண்ணப்போறான்னு தெரியல...? மக்களை சந்திக்காமலேயே இந்தியாவின் சி.எம். எப்படி ஆவுறது...?


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 02, 2026 19:15

தலைமை பண்பு இல்லாத நடிகர் விஜய் 41 அப்பாவி உயிர்கள் இறந்தபோது திமுக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கையை பாஜக கண்டுகொள்ளாமல் விட்டு இருந்தால் தமிழகம் இன்னொரு தக்குறியிடம் இருந்து தப்பி இருக்கும், அந்த நேரத்தில் பாஜக விஜய்க்கு ஆதரவாக பேசியது மிகபெரிய தவறு பாஜக எவ்வளவு நன்மைகள் செய்தாலும் கிருஸ்தவரான நடிகர் விஜய் கண்டிப்பாக விஸ்வாசமாக இருக்க மாட்டார் இவர்கள் டிசைன் அப்படி, இந்த நடிகர் பின்னால் கட்டுபாடற்ற ரசிகர்கள் கூடம் சேருவது தமிழக அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டது என்பதை காட்டுகிறது. திராவிட கட்சிகள் எவ்வளவு ஆபத்தோ அதற்கு சமமான ஆபத்தான கட்சி இந்த நடிகர் கட்சி.


vivek
ஏப் 02, 2026 21:20

அமீத்சா விஜயை இன்னமும் நம்பிக்கிட்டு தான் இருக்கார். தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி வைக்க.


M Ramachandran
ஏப் 02, 2026 19:08

இப்படியெல்லாம் நீங்க சார்ந்த மதத்தில் இப்படியேல்ல போராட சொல்ல வில்லையே சொல்ல. திருப்பரம் குன்றம் நிகழ்ச்சியின் போனது வாய் மூடி நமக்கில்லைய என்று சென்று விட்டு இப்பொ என்ன டிராமா. ஒட்டு வாங்கிக்கனும் கூனி குறுகி சாதாரண நிகழ்ச்சிகள் நடக்கும் போது வாய் மூடி மௌனி யாக இருப்பீர்கள். இப்போ பாரு பாசத்தை புளுகுவதில் ஸ்டாலினையும் மிஞ்சுவீர்கள். உமக்கெல்லாம் எதற்கு அரசியல். தியானி மனிதன் ஒழுக்கம் இல்லை. குடும்பத்துடன் நல்ல உறவு இல்லை.


Rathna
ஏப் 02, 2026 19:06

ஏதோ சம்பந்தம் இல்லாமல் எழுதி கொடுத்ததை படிக்கிற மாதிரி தெரிகிறது. தமிழ்நாட்டின் தலையெழுத்து?


Kudandhaiyaar
ஏப் 02, 2026 18:53

விஜய் சொல்வது போல தமிழ்நாடு முழுவதும் இலவச பேருந்து கொடுத்தால் இரண்டு நாளில் பேருந்து நின்று விடும். அப்புறம் கட்டத்துறை கட்டை வண்டி ல தான் போகணும். யோசிக்காமல் அறிவிக்கிறார்


என்னத்த சொல்ல
ஏப் 02, 2026 17:47

அதானே பார்த்தேன். பிஜேபி யை மட்டும் எப்படி சொல்லமுடியும். DMK சதின்னு சொல்லலேன்னா சாப்பிட்டது வெளியேறாது...